×

விதி மீறி பிரசாரம்; பணம் பட்டுவாடா முதல்வர் மீது பறக்கும்படை புகார் வழக்குபதிவு செய்ய போலீஸ் தயக்கம்

வாழப்பாடி: சேலத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது 2 போலீஸ் ஸ்டேஷன்களில் பறக்கும் படையினர் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், வழக்குபதிவு செய்ய போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளின் பிரசாரத்தையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த வகையில் சேலம் அருகே பிரசாரம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் விதிகளை மீறியதாக பறக்கும் படையினர், போலீசில் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில் கடந்த 22ம் தேதி, அதிமுக கூட்டணியில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சுதீஷை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது தேர்தல் விதிகளை மீறி அதிக வாகனத்தில் வந்து பிரசாரம் செய்ததாக ஏத்தாப்பூர் போலீஸாரிடம் தேர்தல் பறக்கும் படையினர் நேற்றிரவு புகார் தெரிவித் துள்ளனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், சேலம் வாழப்பாடி அருகே கருமந்துறையில் கடந்த 22ம் தேதி நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது பணம் பட்டுவாடா செய்ததாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து தேர்தல் விதிமீறல் கண்காணிப்பு பறக்கும் படையினர் கருமந்துறை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த புகார் குறித்து கருமந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீ சாரிடம் ேகட்டபோது, ‘‘புகாரின் பேரில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர். மற்ற கட்சியினர் விதிமீறலில் ஈடுபட்டால், தேர்தல் பறக்கும்படையினர் புகார் செய்த உடனே போலீசார் வழக்குபதிவு செய்வார்கள். முதல்வர் எடப்பாடி மீது பறக்கும்படையினர் புகார் செய்தும் வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம், எதிக்கட்சிகளுக்கு ஒரு நியாயமா? என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : breach ,Chief Minister ,Travancore , Breach of law, campaign, principal, flying, complaining
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...