×

புதுகை தொகுதியை மீண்டும் மீட்போம் யாரும் நோட்டாவுக்கு ஓட்டு போடாதீங்க: திருச்சி காங். வேட்பாளர் திருநாவுக்கரசர் வேண்டுகோள்

புதுக்கோட்டை: தொகுதி சீரமைப்பு மீண்டும் நடக்கும் போது புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீட்டெடுப்போம். எனவே யாரும் நோட்டாவுக்கு ஓட்டு போடாதீர்கள் என திருச்சி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் கூறினார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவரும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான திருநாவுக்கரசர் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளிடம் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் அளித்த பேட்டி: திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நான் வெற்றி பெற்றால் தொழில் வளர்ச்சி பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.  மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.  பாரம்பரியம் மிக்க புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ஆணையத்தால் தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்டது அதை மீட்பதற்கு என்னாலான முயற்சிகளை  கடந்தகாலங்களில் நான் மேற் கொண்டேன். இதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.  அந்த வழக்கில் நானே ஆஜராகி வாதாடினேன். ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை.

மீண்டும் மறு தொகுதி சீரமைப்பு வரும்போதுதான் புதுக்கோட்டை தொகுதியை மீட்டெடுக்க முடியும் எனவே புதுக்கோட்டையில் நோட்டாவிற்கு வாக்களிப்பவர்கள் இதனை சிந்திக்கவேண்டும். நோட்டாவிற்கு வாக்களித்தால் எந்த பயனும் இல்லை. மேலும் ஒரு சதவீதம் அல்லது 2% வேண்டுமானால் நோட்டாவிற்கு பொதுமக்கள் வாக்களிக்கலாம். அது என்னுடைய வெற்றி வாய்ப்பை பாதிக்காது சட்டசபையில் விஜயகாந்த் மற்றும் ஜெயலலிதாவிற்கு இடையே நடந்த மோதலுக்கு திமுகதான் காரணம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறிவருவது விஜயகாந்தை இழிவுபடுத்தும் செயலாகத்தான் பார்க்க முடியும். இதுபோன்ற விமர்சனங்களை பிரேமலதா வரும் காலங்களில் தவிர்க்க வேண்டும் அகில இந்திய தலைவர்களில் ஒருவராக உள்ள சுதர்சன நாச்சியப்பன் கட்சித்தலைமை முடிவை ஏற்று கார்த்தி சிதம்பரத்திற்கு தேர்தல் பணி ஆற்ற வேண்டும்.

சுயேட்சை வேட்பாளரை கூட எனக்கு போட்டியாளராக தான் நான் கருதுகிறேன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெரியார் குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே அவர் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Noda ,Trichy Cong , Nehru Module, Notta, Voddadinga, Trichy Kang. Candidate Tirunavukkarar
× RELATED திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத்...