×

ராம்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை ஜெயப்பிரதா போட்டி

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். ராஷ்டிரிய லோக் தளம் கட்சியில் இருந்து நீங்கிய பிரபல பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா டெல்லியில் இன்று பாஜகவில் இணைந்தார். தென்னிந்தியாவின் உச்ச நடிகைகளில் ஒருவரான ஜெயப்பிரதா, கடந்த 1994-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்வை தொடங்கினார். அதைத் தொடர்ந்து கட்சியின் சந்திரபாபு நாயுடு பிரிவில் சேர்ந்தார். அதற்கு பலனாக 1996-ம் ஆண்டில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சந்திரபாபு நாயுடு உடனான கருத்து வேறுபாட்டால், தெலுங்கு தேசத்தை விட்டு வெளியேறிய ஜெயப்பிரதா சமாஜ்வாடியில் சேர்ந்தார். 2004 பொதுத் தேர்தலின்போது உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதேபோல 2009-ல் ராம்பூர் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து சமாஜ்வாடியில் இருந்தும் விலகிய அவர், அமர்சிங் என்பவருடன் இணைந்து 2010-ல் ராஷ்ட்ரிய லோக் மன்ச் என்னும் கட்சியைத் தொடங்கினார். 2014 தேர்தலில் அவருக்குத் தோல்வியே கிடைத்தது.

இந்நிலையில் இன்று டெல்லியில் பாஜகவில் இணைந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பேசிய அவர்; பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பணியாற்றுவதில் பெருமை கொள்வதாக குறிப்பிட்டுள்ள ஜெயப்பிரதா, இது எனது வாழ்வின் மிகமுக்கிய தருணம், நாட்டின் பாதுகாப்பு குறித்து விவகாரங்களை முக்கியமாக கருதும் தலைவர்கள் உள்ள தேசிய கட்சியின் அங்கமாக மாறியுள்ளேன் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayaprada ,candidate ,BJP ,constituency ,Rampur Lok Sabha , Rampur, BJP candidate, actress Jayaprada, contest
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி