×

எள் அறுவடையில் விவசாயிகள் மும்முரம் : நல்லெண்ணெய் தயாரிக்க ஆர்வமுடன் வாங்கும் பொதுமக்கள்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டத்தில் எள் அறுவடையில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுத்தமான நல்லெண்ணெய் தயாரிக்க விவசாயிகளிடம் நேரடியாக எள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடி முடிந்த நிலையில் பெரும்பாலான விவசாயிகள் எள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் 2,000 ஏக்கரில் எள் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் இறுதியில் எள் விதை தெளித்து 90 நாட்களுக்கு பிறகு தற்போது அறுவடை செய்யப்பட்டு வெயிலில் உலர்த்தி காய வைத்து செக்கில் கொடுத்து நல்லெண்ணெயாக வாங்குவர். எள் சாகுபடிக்கு அதிகமான தண்ணீர் தேவையில்லாததால் சம்பா அறுவடை வயல்களில் உள்ள மண்ணில் உள்ள தண்ணீரில் வளர கூடியதாகும்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் உளுந்து பயிர் சாகுபடி செய்து வந்தனர். உளுந்து கடந்தாண்டு கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வெளிமாநில உளுந்து வரத்தால் தற்போது குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு உளுந்து சாகுபடி செய்தால் பெருமளவு நஷ்டம் ஏற்படும் என்பதால் பெரும்பாலான விவசாயிகள் உளுந்து பயிருக்கு மாற்றுபயிரான எள் பயிரை சாகுபடி செய்துள்ளனர்.
மேலும் தற்போது நல்லெண்ணெய் அதிகளவில் கலப்படமாக வருவதால் பல்வேறு நோய், வயிற்று பிரச்னை, செரிமாண கோளாறு, இருதய நோய், சர்க்கரை, ரத்தகொதிப்பு போன்ற பல்வேறு நோய்கள் வருவதால் ஏராளமான பொதுமக்கள் எள் வாங்கி அவர்களை இயந்திரத்தில் கொடுத்து தரமான நல்லெண்ணெய்யாக பெற்று கொள்கிறார்கள். அதனால் தற்போது எள்ளுக்கு தேவை அதிகமானது.

இதையடுத்து கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியத்தில் 25 ஏக்கருக்கு மேல் எள் சாகுபடி செய்துள்ளனர். ஒரு ஏக்கர் எள் செடியை அறுவடை செய்தால் 90 கிலோ எள் கிடைத்தது. இதை இயந்திரத்தில் கொடுத்தால் 4 கிலோவுக்கு 1 லிட்டர் தரமான நல்லெண்ணெய் கிடைக்கிறது.சில எள்ளுகள் நெத்தாகவும், தரமானதாகவும் இருந்தால் அதிகளவில் எண்ணெய் கிடைப்பதற்கும் வாய்ப்புண்டு. எள் சாகுபடி செய்து வியாபாரிகளிடம் கொடுத்தால் கிலோ ரூ.70க்கு வாங்குகின்றனர். ஆனால் எள்ளை விற்பனை செய்துவிட்டு கலப்பட எண்ணெய் வாங்குவதற்கு பதில், எள்ளை இயந்திரத்தில் கொடுத்து தரமான எண்ணை பெற்று கொள்ளலாம் என ஏராளமான விவசாயிகள், பொதுமக்களிடமே எள்ளை விற்பனை செய்கிறார்கள். எனவே நல்லெண்ணெய் என்ற பெயரில் பல கலப்பட எண்ணெய்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. அதை தவிர்த்து தற்போது பொதுமக்கள், விவசாயிகளிடம் நேரிடையாக எள் வாங்கி தரமான நல்லெண்ணெய் தயாரித்து பயன்படுத்தி கொள்ள வேண்டுமென எள் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Peasants ,Sleeve Farmers ,Mummuram , Sesame, harvest, farmers
× RELATED வேளாண் பொருட்கள் இறக்குமதியால்...