×

பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் அத்வானி, முரளி மனோகர் பெயர்கள் இல்லாததால் அதிருப்தி!

லக்னோ : மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளவர்கள் பெயர் பட்டில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பாஜக வெளியிட்டு நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி பெயர்கள் இடம்பெறவில்லை. உத்தர பிரதேச மாநிலத்துக்கான பாஜக நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், பட்டியலில் மூத்த தலைவர் அத்வானியின் பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

40 பேர் கொண்ட இந்த பட்டியலில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், உமாபாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால் பாஜகவின் மிக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் பெயர் இடம் பெறவில்லை. ஏற்கனவே காந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு அமித்ஷா பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது. காந்தி நகர் தொகுதியில் தனக்கு சீட் மறுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் அத்வானி இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தன. இந்நிலையில் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலிலும் அத்வானி பெயர் இடம் பெறாதது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Advani ,Murli Manohar , BJP star star LK Advani, Murli Manohar Joshi, Modi
× RELATED மருத்துவமனையில் இருந்து அத்வானி டிஸ்சார்ஜ்