13 ஆண்டில் 74 மடங்கு அதிகரிப்பு நயினார் நாகேந்திரனின் சொத்து மதிப்பு 102 கோடி: தம்பிதுரைக்கு 50 கோடி, தமிழிசைக்கு 10 கோடி

சென்னை: ராமநாதபுரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு 102 கோடி என வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு விபரம்: கையிருப்பு ரொக்கம் 10 லட்சம், 30 லட்சம் மதிப்புள்ள 150 பவுன் நகைகள், அவரது மனைவி கையிருப்பு ரொக்கம் 6 லட்சம், 70 லட்சம் மதிப்புள்ள 350 பவுன் நகைகள். அசையும், அசையா சொத்தாக மொத்தம் நயினார் நாகேந்திரனுக்கு 94.81 கோடியும், அவரது மனைவிக்கு 7.31 கோடி சொத்துக்கள் உள்ளது. 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த மின்சாரம், போக்குவரத்து, மற்றும் தொழில் துறைகளின் அமைச்சராக நயினார் நாகேந்திரன் பதவி வகித்தார். அப்போது, 2006  ேதர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தனது சொத்து மதிப்பு 1.38 கோடி என்று கணக்கு காட்டியிருந்தார்.

நயினார் நாகேந்திரன் கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரனின் மனைவி மற்றும் குழந்தைகளின் சொத்து மதிப்பு 9.5 கோடியாக உயர்ந்தது. கடந்த 2006 கணக்ககோடு ஒப்பிடும்போது நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது மனைவியின் சொத்து மதிப்பு 13 ஆண்டுகளில் 74 மடங்கு அதிகரித்துள்ளது.

தம்பிதுரை சொத்து மதிப்பு

கரூர் மக்களவை தொகுதிக்கு அதிமுக சார்பில் தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்துள்ள மனுவில், குடும்ப உறுப்பினர்கள் உட்பட 50 கோடி அளவில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்பித்துரை பெயரில் உள்ள அசையா சொத்தின் மதிப்பு ரூ.91,08,212. இவர் பெயரில் உள்ள பூர்வீக சொத்தின் மதிப்பு 1,92,166. இவரின் மனைவி பானுமதி பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையான சொத்துக்களின் சந்தை மதிப்பு 41,64,13,500. மகள் நர்மதா பெயரில் உள்ள அசையும் சொத்தின் மதிப்பு 1,04,93,518. அசையா சொத்தின் மதிப்பு 20,20,000, இந்த சொத்துக்களின் சந்தை மதிப்பு 2 கோடியே 10லட்சம்.

எச்.ராஜா சொத்துமதிப்பு:

சிவகங்கை பாஜ வேட்பாளர் எச்.ராஜா குறிப்பிட்டுள்ள ெசாத்து மதிப்பு:

அசையும் சொத்து:

எச்.ராஜா: 50 லட்சத்து 97 ஆயிரத்து 544.

மனைவி லலிதா: 19 லட்சத்து 12 ஆயிரத்து 417.

அசையா சொத்து:

எச்.ராஜா: 77 லட்சத்து 90 ஆயிரம்

மனைவி லலிதா: 94 லட்சத்து 50 ஆயிரம்.

மொத்த சொத்து மதிப்பு : ரூ.2 கோடியே 42 லட்சத்து 49 ஆயிரத்து 961. இவர் 2014ல்  சொத்து மதிப்பாக மொத்தம்: ₹93 லட்சத்து 64 ஆயிரத்து 714 என காட்டியுள்ளார்.

தமிழிசை :

தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை தாக்கல் செய்த சொத்து மதிப்பு: கார், நகை, வங்கி இருப்பு என அசையும் சொத்துகள் தனது பெயரில் 1 கோடியே 50 லட்சத்து 7 ஆயிரத்து 600 என்றும், தனது கணவர் சவுந்திரராஜன் பெயரில் 2 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரம் என்றும், இருவரது பெயரிலும் கையிருப்பாக தலா 50 ஆயிரம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் தனது பெயரில் 50 லட்சம் மதிப்பில் நிலமும், கணவர் பெயரில் 6.50 கோடி மதிப்பில் நிலங்கள், பிளாட்கள் உள்ளிட்ட அசையா சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ெமாத்த சொத்து மதிப்பு மொத்தம் 10 கோடி. வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் 26 கோடி, அவருடைய மனைவி ஜெயந்தி ெபயரில் 12.79 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளது.இதைப்போன்று தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் அசையும் மற்றும் அசையா சொத்துகள் மதிப்பு 5.86 கோடி, அவருடைய கணவர் சந்திரசேகரின் சொத்து மதிப்பு 2.98 கோடி ஆகும்.

கார்த்தி சிதம்பரம் சொத்து மதிப்பு அசையா சொத்து:

கார்த்தி சிதம்பரம்: 22 கோடியே 88 லட்சத்து 89 ஆயிரம்.

மனைவி நிதி: 22 கோடியே 96 லட்சம் 67 ஆயிரம்.

அசையும் சொத்து:

கார்த்தி சிதம்பரம்: 24 கோடியே 13 லட்சத்து 73 ஆயிரம்.

மனைவி நிதி: 9 கோடியே 37 லட்சத்து 99 ஆயிரம்.

கையிருப்பு:

கார்த்தி சிதம்பரம்: 3 லட்சத்து 54 ஆயிரத்து 619.

மனைவி நிதி: 3 லட்சத்து 31 ஆயிரத்து 106.

மொத்தம்: 79 கோடியே 44 லட்சத்து 13 ஆயிரத்து 725.

டாக்டர் கிருஷ்ணசாமி குடும்பத்தின்  ஓராண்டு வருமானம் 1.54 கோடி

தென்காசி தொகுதி புதியதமிழகம் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி சொத்து விபரங்கள்: அசையும் சொத்து 91 லட்சத்து 98 ஆயிரத்து 646ம் மனைவி சந்திரிகா கிருஷ்ணசாமிக்கு 2 கோடியே 29 லட்சத்து 17 ஆயிரத்து 311ஆக உள்ளது. மகன் ஷியாம் பெயரில் 47 லட்சத்து 86 ஆயிரத்து 514 அசையும் சொத்தாக உள்ளது. மேலும் அசையா சொத்துக்களாக கிருஷ்ணசாமிக்கு 49 லட்சத்து 62 ஆயிரத்து 725ம் மனைவி சந்திரா கிருஷ்ணசாமி பெயரில் 1 கோடியே 20 லட்சத்து 71 ஆயிரத்து 802 மற்றும் மகன் ஷியாம் பெயரில் 3 கோடியே 90 லட்சத்து 65 ஆயிரத்து 625ம் உள்ளது.

தோராயமான தற்போதைய மொத்த சொத்து மதிப்பு கிருஷ்ணசாமிக்கு 7 கோடியே 33 லட்சத்து 84 ஆயிரத்து 300ம் சந்திரிகா கிருஷ்ணசாமிக்கு 6 கோடியே 80 லட்சத்து 91 ஆயிரமும் ஷியாமிற்கு 7 கோடியே 38 லட்சத்து ஆயிரமும் உள்ளது. கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் எம்.பி.பி.எஸ் படிப்பு முடித்துள்ளார். அதே 2015-16ம் நிதியாண்டில் அவரது வருவாய் 90.88 லட்சம் என்றும், 2016-17ல் 49.83 லட்சம் எனவும், 2017-18ல் ரூ.48.89 லட்சம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2017-18ல் டாக்டர் கிருஷ்ணசாமி 41.48 லட்சமும், அவரது மனைவி டாக்டர் சந்திரிகா 63.78 லட்சமும் வருமான கணக்கு காட்டியுள்ளனர். டாக்டர் கிருஷ்ணசாமி குடும்பத்தின் கடந்த ஆண்டு வருமானம்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>