விமான நிலையத்தில் நெகிழ்ச்சி மாற்றுத்திறனாளி சிறுவனை உற்சாகப்படுத்திய டோனி

சென்னை:  விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி சிறுவனை பார்த்த சிஎஸ்கே கேப்டன் டோனி, கை குலுக்கி உற்சாகப்படுத்தினார்.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் தாம்ஸன் ஆனந்தராஜ்.  இவரது மகன் டேவிட் (16), மூளை வளர்ச்சி குன்றியவர். அதோடு வாய் பேசவும் நடக்கவும் இயலாதவர். அவரை சக்கர நாற்காலியில் வைத்துதான் குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். டோனியின் பரம ரசிகனான டேவிட், அவர் விளையாடும் அனைத்து போட்டியையும் டிவியில் பார்த்துவிடுவான். இரவு நேரங்களிலும் நீண்டநேரம் கண் விழித்து பார்ப்பான். டோனி அவுட் ஆகிவிட்டால் உடனே டிவியை ஆப் செய்து விடுவான்.

சைகை மூலமாக எப்படியாவது டோனியை பார்க்க வேண்டும் என்று அடிக்கடி பெற்றோரிடம் அடம்பிடித்து வந்த நிலையில், சிஎஸ்கே வீரர்கள் அடுத்த போட்டிக்காக டெல்லி செல்வதை அறிந்து பெற்றோர், நண்பர்கள் உதவியுடன்  விமான நிலையத்துக்கு வந்து காத்திருந்தான். கிரிக்கெட் வீரர்கள்  உள்ளே செல்லக்கூடிய பகுதியில், பாதுகாப்பு அதிகாரிகள் டேவிட்டை  சக்கர நாற்காலியில் அமர வைத்தனர். பிற்பகல் 3.15 மணிக்கு விமான நிலையம் வந்த டோனியிடம் இந்த விஷயத்தை கூறிய உடன் கொஞ்சமும் தயங்காமல் சிறுவனுக்கு கை கொடுத்து, தோளைத் தட்டி உற்சாகப்படுத்தியதுடன், மண்டியிட்டு அமர்ந்து புகைப்படம் எடுக்கவும் உதவினார். தொடர்ந்து, அவரது பெற்றோரிடம் உடல்நிலை குறித்து விசாரித்தார். அப்போது, தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக டேவிட் உற்சாக மிகுதியில் கண்ணீர்விட்டான். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhoni ,airport , Dhoni ,elderly boy, airport
× RELATED பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து...