×

ஜெ.ஜெ.நகரில் அடுத்தடுத்து 3 கடைகளில் தீவிபத்து குடோனில் நிறுத்திய 9 கார்கள் எரிந்து நாசம்: சதிவேலையா என விசாரணை

அண்ணாநகர்: சென்னை ஜெ.ஜெ.நகரில் அடுத்தடுத்து 3 கடைகளில் ஏற்பட்ட தீவிபத்தில் குடோனில் நிறுத்திய 9 கார்கள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கு சதிவேலை காரணமா என போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.சென்னை ஜெ.ஜெ.நகர், கோல்டன் ஜார்ஜ் ரத்தினம் சாலையில் கார்த்திகேயன் என்பவக்கு சொந்தமான ஆட்டோ கேரேஜ், பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான பெயின்டிங் கடை, விஜய் என்பவருக்கு சொந்தமான கார் ஒர்க்‌ஷாப்  ஆகியவை உள்ளன. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் மேற்கண்ட 3 பேரும் தங்களது கடைகளை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் விஜயின் கார் ஒர்க்‌ஷாப் உள்ளிட்ட 3  கடைகளிலும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து ஜெ.ஜெ.நகர், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி, 3 கடைகளிலும் பிடித்த தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் ஒர்க்‌ஷாப் குடோனில் நிறுத்தப்பட்டிருந்த 9 கார்கள் மற்றும் ஒரு பைக் முழுவதும் எரிந்து நாசமானது. இது தொடர்பாக ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் வழக்குப்பதிவு செய்து, மின் கசிவு  ஏற்பட்டு தீ விபத்து நடந்ததா? அல்லது நாசவேலை காரணமா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.பைக் எரிப்பு: காசிமேடு இந்திரா நகரை சேர்ந்த தாமு (23), தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். நேற்று அதிகாலை  இந்த பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது.  இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாமு, தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றார். ஆனால், அதற்குள் பைக் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார்  விசாரிக்கின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : junctions ,JJNagar , In JJNagar, 3 stores , fire, 9 cars parked , Kutone
× RELATED சென்னையில் அமலானது வேக கட்டுப்பாடு...