×

நோயாளி போல் நடித்து மருத்துவரின் செல்போன் திருட்டு

சென்னை: ஏழுகிணறு, போர்ச்சுகீஸ் சர்ச் தெருவில் வசிப்பவர் ஆறுமுகம் (64) ஓய்வு பெற்ற அரசு மருத்துவரான இவர், தற்போது வீட்டில் கிளினிக் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை ஆறுமுகம்  கிளினிக்குக்கு நோயாளி போல வந்த ஒரு நபர், மருத்துவர் அசந்த நேரத்தில் அவரது விலை உயர்ந்த செல்போனை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கொருக்குபேட்டை மீனாம்பாள் நகரை சேர்ந்த உமர் (48)  என்பவரை போலீசார் கைது ெசய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
* பம்மல், முத்தமிழ் நகரை சேர்ந்தவர் ராம் (55). இவரது மனைவி அருணா (50). இவர்களது மகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராம், கடந்த சில மாதங்களுக்கு  முன் இறந்துவிட்டார். இதனால், விரக்தியில் இருந்த அருணா நேற்று காலை வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
*  பூக்கடை பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் சுப்பிரமணி (39) என்பவர் நேற்று அதிகாலை சவாரி முடிந்து ஆட்டோவில் தூங்கிகொண்டிந்தபோது அவரது செல்போனை பறித்து சென்ற இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில்  ஒப்படைத்தனர். விசாணையில் அவர்கள் சவுகார்பேட்டை சதீஷ் (21), தீனா (19) என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.
* அரும்பாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பிரவீன் (17) நேற்று காலை அமைந்தகரை ஸ்கைவாக் மேம்பாலம் அருகே நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்கள், அவரை வழிமறித்து செல்போனை பறித்து சென்றனர்.
* செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம்  ரங்கா கூட்டுறவு நகரில் உள்ள  லட்சுமி கணபதி கோயிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து சுமார் ₹15 ஆயிரத்தை திருடி சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : doctor ,patient , Acting,patient, The doctor, cell phone, theft
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...