×

பாகிஸ்தானுக்கு தீபாவளி எப்போ தெரியுமா?: குஜராத் முதல்வர் கண்டுபிடிப்பு

அகமதாபாத்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மெஹ்சானா பகுதியில் பா.ஜ.,வின் தேர்தல் பிரசாரத்தை ெதாடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மே 23ம் தேதி வெளியாக உள்ள மக்களவை தேர்தல் முடிவுகளில் தவறுதலாக காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டால், பாகிஸ்தான் அந்த நாளை தீபாவளியாக கொண்டாடும். ஏனெனில் காங்கிரஸ் கட்சி அவர்களுக்கு அவ்வளவு நெருக்கமானது. மே 23ல் மோடியை வெற்றி பெற செய்ய வேண்டும் என நாட்டு மக்கள் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். அப்போதுதான் அது பாகிஸ்தானுக்கு துக்கத்தையும், பயத்தையும் ஏற்படுத்தும். ராகுலின் ஆலோசகர் சாம் பிட்ரோடா, புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை சேர்ந்த 57 இளைஞர்கள் மீது குற்றம் சாட்டுவது தவறு என்கிறார்.

காங்கிரசைச் சேர்ந்த அனைத்து தலைவர்களுமே பாகிஸ்தானின் ஊதுகுழலாகவே பேசி வருகின்றனர். மோடியும், அமித்ஷாவும் குஜராத்தின் மகன்கள். உலக அரங்கில் இந்தியாவை உச்சிக்கு கொண்டு செல்ல உழைத்து வருகின்றனர். மோடியை தோற்கடிக்கவே எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளன. ராம ராஜ்ய பாதையில் நாட்டை வழிநடத்தும் மோடிக்கு எதிராகவே அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். அவர்களின் போக்கிற்கு முடிவு கட்டுவதற்கான தேர்தல் இது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Deepavali ,Chief Minister ,Pakistan ,Gujarat , Deepavali, Pakistan, Gujarat Chief Minister
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...