×

வெளிநாடுகளின் 28 செயற்கைக்கோள்களுடன் ஏப்ரல் 1ம் தேதி விண்ணில் பாய்கிறது இமிசேட்

பெங்களூரு: இமிசாட் என்ற மினி செயற்கைக்கோள் மற்றும் வெளிநாடுகளின் 28 செயற்கைக்கோள்களை வருகிற ஏப்ரல் மாதம் 1ம்தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதில் சாதனை படைத்து வருகிறது. இந்தியாவின் செயற்கைக்கோள்களுடன் வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களும் அதிக அளவில் விண்ணில் செலுத்தியுள்ளது. இதனிடையே அமெரிக்கா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளின் 28 செயற்கைக்கோள்களை மார்ச் 21ம் தேதி விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ தீவிரமாக மேற்கொண்டது. சில தவிர்க்க முடியாத காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தியாவின் இமிசாட் செயற்கைக்கோளுடன் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏப்ரல் 1ம் தேதி விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட வேலையில் இஸ்ரோ இறங்கியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ அதிகாரிகள் கூறுகையில், இமிசாட் மினி செயற்கைக்கோள் 436 கிலோ எடை கொண்டது. மின்காந்தவியல் சர்வே நடத்துவதற்கு உதவும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இமிசாட் செயற்கைக்கோள்களுடன் வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தாவன் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்படும். வானிலையில் மாற்றம் ஏற்பட்டால் விண்ணில் ஏவப்படும் நேரத்திலும் மாற்றம் ஏற்படும்’’  என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Emisad , Emisat, satellites overseas
× RELATED எமிசாட் உள்ளிட்ட 29...