×

டிடிஎட் தேர்வு மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை:  அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் டிடிஎட் என்னும் பட்டப் படிப்பு படித்து வரும் மாணவ,  மாணவியருக்கு கடந்த ஜூன் மாதம் தேர்வு நடந்தது. அதன் விடைத்தாள் நகல் பெறுவதற்கு மார்ச் 5ம் தேதி முதல் 7ம் தேதி விண்ணப்பிக்க அனுமதி  அளிக்கப்பட்டது. அவர்களின் விடைத்தாள் நகல்கள் நாளை முதல் 29ம் தேதி வரை scan.tndge.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் ஜெராக்ஸ் பெற்ற பாடங்களுக்கு மட்டும், விருப்பம் இருந்தால் மேற்கண்ட இணைய தளத்தில் உள்ள  விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தை நாளை முதல் 30ம் தேதி வரை மாவட்ட ஆசிரியர்  கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் ெசய்ய வேண்டும். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DTD Exam, apply
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...