×

ஜார்க்கண்டில் காங்கிரஸ் அணியிலிருந்து ஆர்ஜேடி விலகல்?

ஜார்க்கண்டில் தொகுதி பங்கீட்டில் திருப்தி இல்லாததால் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) விலகும் என பேச்சு எழுந்துள்ளது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட அறிவிப்பு வெளியிட்டனர்.  இந்த கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அப்போதே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது. தற்போது காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 4 தொகுதியிலும் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 2 தொகுதியிலும் ஆர்ஜேடி ஒரு தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

ஆனால் ஆர்ஜேடி தங்களுக்கு வெறும் ஒரு தொகுதியை ஒதுக்கியதால் கடும் கடுப்பில் இருக்கிறதாம். இந்த ஒரு தொகுதியை ஏற்கவும் ஆர்ஜேடி மறுத்துள்ளது. எனவே காங்கிரஸ் கூட்டணியிலிருந்து அந்த கட்சி விலகும் என கூறப்படுகிறது. ஜார்க்கண்டில் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என காங்கிரஸின் கணக்கு தற்போது தவறி வருவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : RJD ,Congress ,Jharkhand , Congress in Jharkhand, RJD
× RELATED இவிஎம் வழக்கில் உச்சநீதிமன்றம்...