நாட்டின் வளம், பாதுகாப்பு, வளர்ச்சி என அனைத்திலும் சிறப்பாக செயலாற்றும் மோடி தான் சரியான நிரந்தர பிரதமர்: முக்தார் அப்பாஸ் நக்வி

டெல்லி: பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான முக்தார் அப்பாஸ் நக்வி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரசுக்கு சொல்வதை தட்டாமல் செய்யும் ஒருவர் பிரதமராக வேண்டும். நாட்டிற்கு சுழற்சி முறையிலோ, மாற்று முறையிலோ வருடத்தின் முதல் 6 மாதத்திற்கு ஒரு பிரதமர், அடுத்த 6 மாதத்திற்கு வேறொரு பிரதமர் என தேவையில்லை என கூறுினார். மேலும் காங்கிரசுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பிரதமர் வேண்டும் எனவும், ஆனால் நாட்டிற்கு நிரந்தர பிரதமர் தான் வேண்டும் என தெரிவித்தார்.

நாட்டின் வளம், பாதுகாப்பு, வளர்ச்சி என அனைத்திலும் சிறப்பாக செயலாற்றும் பிரதமர் மோடி தான் அந்த சரியான நிரந்தர பிரதமர் என நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பிரியங்கா அரசியல் சுற்றுலா மேற்கொள்கிறார் என குறிப்பிட்டார். கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி திட்டப்பணிகளை செய்வது குறித்து தவறான வசைப்பாடும் கும்பலாக காங்கிரஸ் கட்சியினர் மாறி விட்டனர் என தெரிவித்தார். மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான மோடியின் நடவடிக்கைகளை காங்கிரசால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை எனவும் கூறினார். இந்த செயல்களை கண்டு மனசோர்வடைந்த காங்கிரஸ் கட்சியினர் மோடிக்கு எதிரான மோசமான பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர் என கூறினார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: