×

நிர்மலாதேவியை கைதிகளை வைத்து 3 முறை கொல்ல முயற்சி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பரபரப்பு புகார்

விருதுநகர் : பேராசிரியை நிர்மலாதேவி சிறையில் இருந்த போது மற்ற கைதிகளை வைத்து கொலை செய்ய முயற்சித்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆகியுள்ள நிர்மலாதேவியை சந்தித்ததாக கூறினார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி 11 மாதங்கள் சிறையில் இருந்தார்.

அப்போது பிற கைதிகளை வைத்து நிர்மலாதேவியை அடித்து துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் சிறையில் வழக்கறிஞர் என்ற அடிப்படையில் சுதந்திரமாக பேச முடியவில்லை என்றும் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை ஆவின் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேரும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக பசும்பொன் பாண்டியன் பகீரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக 127 காட்சிப்பதிவு தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு தொடர இருப்பதாகவும் பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmaladevi ,detainees ,Pasumpon Pandian , Professor, Nirmaladevi, prison, attorney, pasumbon pandian, violence
× RELATED பயிற்சி முடித்துள்ள காவலர்கள்...