×

பழநி கோயிலுக்கு தண்ணீர் லாரியை காணிக்கையாக தந்த பக்தர்

பழநி: பழநி கோயிலுக்கு கோவையை சேர்ந்த முருகபக்தர் ஒருவர் ரூ.18 லட்சம் மதிப்புள்ள தண்ணீர் லாரியை காணிக்கையாக வழங்கினார். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பணம், வெள்ளி, தங்கம் உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். தவிர, கோயிலுக்கு டிராக்டர் உள்ளிட்ட பிற பொருட்களையும் காணிக்கையாக வழங்கி உள்ளனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற முருக பக்தர் ரூ.18 லட்சம் மதிப்புள்ள புதிய தண்ணீர் லாரி ஒன்றை காணிக்கையாக வழங்கினார்.

காணிக்கையாக வழங்கப்பட்ட தண்ணீர் லாரிக்கு திருக்கோயில் அலுவலகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. லாரியின் சாவியை முருக பக்தர் பாலசுப்பிரமணியம் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா, கண்காணிப்பாளர் வடிவு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் காணிக்கையாக வழங்கப்பட்ட தண்ணீர் லாரி பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : devotee ,Palani Temple , Palani temple, Larry, tribute
× RELATED திருத்தணி முருகன் கோயிலுக்கு...