×

காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா தகவல் வேலைவாய்ப்பின்மை பிரச்னை காங். பிரசாரத்தில் முக்கியத்துவம்: டெல்லி 7 தொகுதிகள்

மக்களவை தேர்தல் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் வாக்குறுதியை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.  காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியை தயாரிப்பதற்காக  19 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளன. இதன் உறுப்பினரும், அக்கட்சியின் வெளிநாடு வாழ் பிரிவின் தலைவருமான சாம் பிரட்டோ நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:வேலைவாய்ப்பின்மை விவகாரம் மிகப்பெரிய சிக்கலாகும் நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. புதிய வேலைவாய்ப்பு எதையும் நாம் உருவாக்கவில்லை. அதேசமயம் வேலைவாய்ப்பின் அடித்தளத்தையும் ஆட்டம்  காண வைத்து விட்டோம். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கையால் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இனியும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தாவிட்டால், அது மிகப்பெரிய பிரச்னையாகி விடும்.

எனவே, காங்கிரசின் பிரசாரத்தில் வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும். இப்பிரச்னைக்கு காங்கிரஸ் எப்படி தீர்வு காணப்போகிறது என்பதை தேர்தல் வாக்குறுதியில் பார்ப்பீர்கள். அடுத்ததாக விவசாயிகள்  பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும். பிரியங்கா காந்தியின் அதிகாரப்பூர்வ அரசியல் பிரவேசம், பொதுத் தேர்தலில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும். மக்களவை தேர்தலானது, அடுத்த பிரதமர் ராகுலா, மோடியா என இரு தனிநபர்களுக்கு இடையேயான போட்டியாக நான் பார்க்கவில்லை. இது, தேச நலனுக்கான யோசனைகளின் சவாலாக இருக்கும். எந்த மாதிரியான தேசத்தை  முன்னெடுத்து செல்லப் போகிறோம். வேலைவாய்ப்பு உள்ளிட்ட உண்மையான சவால்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது குறித்து கட்சிகள் கொண்டுள்ள திட்டங்கள், கொள்கைகளுக்கு இடையில் நடக்கும் போட்டி.  வெறுப்பு அரசியலுக்கும், அன்பு செலுத்தும் அரசியலுக்கும் நடக்கும் மோதலாகத்தான் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sam Pitroda ,Congress ,Delhi , Congress senior ,Sam Pitroda, reported, Delhi 7 blocks,
× RELATED சர்ச்சை கருத்தைத் தொடர்ந்து பதவி...