×

கேரளாவில் பல பெண்களை திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணம், நகை மோசடி: கல்யாண மன்னன் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் பல இளம்பெண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் நகை, பணம் மோசடி செய்த கல்யாண மன்னனை போலீசார் கைது செய்தனர்.திருவனந்தபுரம்  அருகே நெய்யாற்றின்கரை, தோட்டிங்கரையை சேர்ந்தவர் அமல்(31). திருமணமாகி  மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அமல் தனது முதல்  திருமணத்தை மறைத்து, பாறசாலையை  சேர்ந்த இளம் பெண்ணை கடந்த 2 வருடங்களுக்கு  முன்பு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.பெண் வீட்டாரிடம் துபாயில் ₹2 லட்சம் சம்பளத்தில் வேலை செய்வதாக கூறியுள்ளார். இதை நம்பி பெண்  வீட்டார் வரதட்சணையாக 30 பவுன் நகையும், ₹10 லட்சம் ரொக்கமும்  கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்து சில  மாதங்கள் கழித்து அமலுக்கு ஏற்கனவே  திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பது 2வது மனைவிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் பாறசாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் அமல் மீது  வழக்குப்பதிவு  செய்தனர்.

இதற்கிடையே தலைமறைவான அமல், கடந்த சில மாதங்களுக்கு  முன், எர்ணாகுளத்தை சேர்ந்த இளம்பெண்ணை 3வதாக திருமணம் செய்துள்ளார். ெபண்  வீட்டார் வரதட்சணையாக 50 பவுன் நகை, ₹10 லட்சம்   கொடுத்துள்ளனர். இந்த  நிலையில் 3வது மனைவிக்கும், அமலுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள்  இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் எர்ணாகுளம், பாலாரிவட்டம்  போலீசில் புகார் செய்தார். போலீசார் அமல் மீது  வழக்குப்பதிவு செய்து  அவரை கைது  செய்தனர்.  தொடர் விசாரணையில், இவரது திருமணத்திற்கு அவரது பெற்றோரும்  உடந்தையாக இருந்துள்ளது தெரியவந்தது. மேலும் அமல் வேறு ஏதேனும் ெபண்களை ஏமாற்றி  திருமணம் செய்துள்ளாரா? என்றும் போலீசார்  விசாரிக்கின்றனர்.   விசாரணைக்கு பின் அமலை எர்ணாகுளம் சிறையில் போலீசார்  அடைத்தனர். அமலின் பெற்றோரை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kerala ,women ,millions ,king ,Kalyanam , Kerala,millions , money, jewelery ,fraud, Marriage arrested
× RELATED கேரளாவில் கர்ப்பிணிகளுக்கான அழகி...