×

சப் கான்ட்ராக்ட் விட்டு பணம் சம்பாதிக்கும் பொறியாளர்கள் 150 திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்ட அவலம்

* மீண்டும் நிதி கேட்டு அரசுக்கு கடிதம்

சென்னை: தமிழக பொதுப்பணித் துறையில் பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவது, அணை, ஏரிகள் புனரமைத்தல், புதிதாக அணைக்கட்டுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் விட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படுகிறது. இவ்வாறு ஒப்பந்தம் எடுக்கும் சில நிறுவனங்கள் தாங்கள் நேரடியாக பணிகளை மேற்கொள்வதில்லை. குறிப்பாக, அதிகாரிகள் சிலர் தங்களது பினாமியாக கான்ட்ராக்டர்களை வைத்து கொண்டு அவர்கள் மூலம் டெண்டர் எடுக்கின்றனர். அந்த டெண்டருக்கான பணிகளை மேற்கொள்ளாமல் குறிப்பிட்ட கமிஷன் தொகையை பெற்று கொண்டு, சப் கான்ட்ராக்ட் விட்டு பணம் சம்பாதிக்கின்றனர்.அதிகாரிகளும் தங்களது பினாமி ஒப்பந்த நிறுவனம் எடுத்த டெண்டர் என்பதால், சப்கான்ட்ராக்ட் எடுத்த நிறுவனங்கள் பணிகளை முடித்து விட்டதா, இல்லையா என்று கூட பார்ப்பதில்லை. இதனால், சில நேரங்களில், சப் கான்ட்ராக்ட் எடுத்த நிறுவனங்கள் இழப்பு எனக்காரணம் கூறி பணிகளை முடிக்காமல் ஓட்டம் பிடித்து விடுகின்றனர். இவ்வாறு பணியை முடிக்காத ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்களை கருப்பு பட்டியலில் வைத்து விட்டு, அந்த நிறுவனத்திற்கு டெண்டர் தரக்கூடாது என்பது தான் விதி.

ஆனால், அதிகாரிகள் தொடர்ந்து அந்த நிறுவனங்களுக்கு டெண்டர் தருகின்றனர். அந்த நிறுவனங்கள சப் கான்ட்ராக்ட் விட்டு வேலையே செய்யாமல் தற்போது வரை பணம் சம்பாதித்து வருகின்றனர். இந்த நிலையில் சப் கான்ட்ராக்ட் விட்டதால், தற்போது வரை பொதுப்பணித்துறை சார்பில் 150க்கும் மேற்பட்ட பணிகள் அப்படியே கிடப்பில் உள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சமீபத்தில் கிடப்பில் உள்ள திட்டப்பணிகள் குறித்து அரசு செயலாளர் பிரபாகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தால் தான் பணிகளை கைவிட்டதாக பொறியாளர்கள் தவறாக அறிக்கை அளித்துள்ளனர். ஆனால், கிடப்பில் உள்ள பணிகள் அனைத்தும் சப்கான்ட்ராக்ட் விட்டதால் தான் முடங்கியுள்ளது. அதிகாரிகள் தங்களுக்கென்று பினாமி ஒப்பந்த நிறுவனம் வைத்து கொண்டு, அந்த நிறுவனம் மூலம் 20 சதவீதம் கமிஷன் பெற்று விட்டு சப்கான்ட்ராக்ட் விட்டுள்ளனர். ஆனால், அதை வெளியில் காட்டாமல் தவறாக அறிக்கை அளித்துள்ளனர். இதனால், அரசுக்கு தான் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Subcontracting engineers , Subcontract, engineers,
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...