×

ஜி.கே.வாசனை புறக்கணிப்பதாக கூறி தேமுதிக வேட்பாளரை தமாகாவினர் முற்றுகை

* வடசென்னை தொகுதியில் கோஷ்டி மோதல் உச்சம்

பெரம்பூர்: வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிடுகிறார். அவரது அறிமுக கூட்டம் நேற்று ஓட்டேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். வேட்பாளர் மோகன்ராஜ் வரும்போது நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் அவரை முற்றுகையிட்டு, எங்கள் தலைவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. இதற்கு உரிய பதில் தர வேண்டும், என்றனர். அதற்கு மோகன்ராஜ் உரிய பதில் சொல்லாமல் நேரடியாக மண்டபத்திற்குள் சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த தமாகா தொண்டர்கள் மாவட்ட செயலாளர் பிஜூ சாக்கோ தலைமையில் மண்டபத்தில் முன் நின்று, வேட்பாளரை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் தமாகா வடசென்னை மாவட்ட செயலாளர் பிஜூ சாக்கோ நிருபர்களிடம் கூறுகையில், தேர்தலில் எங்கள் தலைவர் கூறிய ஒரே காரணத்திற்காக இந்த கூட்டணிக்கு சம்மதித்து இவர்களுக்கு வேலை செய்ய வந்தோம்.

ஆனால் எங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. மேலும் எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன்  புகைப்படங்கள் சிறிய அளவில் போடப்படுகின்றன. அவரது பெயரும் பயன்படுத்துவதில்லை. எங்களுக்கு முறையான அழைப்பு விடுக்கவில்லை. இதனால் இந்த கூட்டத்தை புறக்கணித்து செல்கிறோம். எங்களுக்கு உரிய மரியாதை கிடைக்காவிட்டால், தேர்தலில் அவர்களுக்கு வடசென்னையில் நாங்கள் ஒத்துழைப்பு தரமாட்டோம். என்றார்.
பின்னர், கூட்டத்தை புறக்கணித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே தேமுதிகவினர் போட்டியிடும் இடங்களில் பாமகவினர் உரிய ஒத்துழைப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் தற்போது தமிழ் மாநில காங்கிரசும் தேமுதிகவிற்கு எதிராக குரல் எழுப்பி உள்ளதால் தேமுதிகவின் நிலை கவலை அளிப்பதாக அக்கட்சித் தொண்டர்கள் தெரிவித்தனர். இதனால் வடசென்னையில் அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : siege ,candidate ,DMD ,GK Vasan , GK Vasan, TMC candidate,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்