×

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் ஏப்ரல் 16ம் தேதி வரை பிரசாரம்: நாஞ்சில் சம்பத் பேட்டி

சென்னை: திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் ஏப்ரல் 16ம் தேதி வரை பிரசாரம் செய்ய போவதாக நாஞ்சில் சம்பத் கூறினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். பின்னர்  வெளியில் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களையும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலில்  களம்காணும் வேட்பாளர்களையும் ஆதரித்து நாளை முதல் (26ம் தேதி) முதல் ஏப்ரல் 16ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன். அதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறவந்தேன்.

ஏற்கனவே நடைபெற்ற 4 திமுக கூட்டங்களில் பேசியிருக்கிறேன். அதைப் போன்று அயனாவரத்திலும் பிரசாரம் செய்துள்ளேன். தீர்ந்து போகாத திராவிட இயக்கத்தின் கொள்ககைளை வென்று எடுக்கும் மகத்தானது மு.க.ஸ்டாலின் தலைமை. பாஜகவை எதிர்த்து தான் பிரசாரம் செய்கிறேன் பயணத்திட்டம் அறிவாலயத்தில் இருந்து தான் போட்டுக் கொடுக்கின்றனர் அதன்படி தான் போய் கொண்டு இருக்கிறேன் நான் திமுகவில் தான் இருக்கிறேன். இன்வெஸ்டுமென்ட் தருகிறேன். இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : allies ,DMK ,Nanjil Sampath , DMK, campaign, Nanjil Sambath,
× RELATED திமுக., கொடியேற்று நிகழ்ச்சி