×

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முத்தரசன் பிரசாரம்

சென்னை: திமுக தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை: வரும் 24ம் தேதி    விழுப்புரம்- கடலூர் பகுதியிலும், 25, 26ம் தேதி நாகப்பட்டினம் தொகுதி, 27ம் தேதி வடசென்னை, 28ம் தேதி  திருவள்ளூர், 29ம் தேதி    திருச்சி, 30ம் தேதி தஞ்சாவூர், 31ம் தேதி பெரம்பலூர் - அரியலூர், மார்ச் 1ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், 2ம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம், 3ம் தேதி   விருதுநகர், தென்காசி, 4ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, 5ம் தேதி    மதுரை, 6ம் தேதி தேனி 7ம் தேதி திண்டுக்கல், கரூர், 8ம் தேதி திருப்பூர், 9ம் தேதி கோவை, 10ம் தேதி ஈரோடு, நாமக்கல், 11ம் தேதி சேலம்- ஆத்தூர், 12ம் தேதி  விழுப்புரம் மாவட்டம், 13ம் தேதி கடலூர் - சிதம்பரம், 14ம் தேதி  மயிலாடுதுறை தொகுதி, 15, 16ம் தேதி   நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய உள்ளார்.இவ்வாறு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mutharasan ,campaign ,coalition candidate , Mutharasan campaign, candidate
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...