×

அப்பாவை தவிர்த்த அகிலேஷ், ஒரே நாளில் மனமாற்றம் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் மிஸ்சிங் ஆகி மீண்ட முலாயம்

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர் மற்றும் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் முலாயம் சிங் யாதவ்் பெயர் ஒரு வழியாக இடம்பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இங்கு அகிலேஷ் யாதவின்  சமாஜ்வாடி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாடி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இரண்டு தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்காக விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமாஜ்வாடி வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் 40 பேரின் பெயர்கள் அடங்கிய நட்சத்திர பேச்சாளர் பட்டியில்  நேற்று வெளியிடப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் பட்டியலை வெளியிட்டார். இந்த 2 பட்டியலிலும் கட்சியின் நிறுவன தலைவரான முலாயம் பெயர் இடம்பெறவில்லை. வேட்பாளர் பட்டியலில் அகிலேஷ் யாதவ், அசாம் கான், டிம்பிள் யாதவ் மற்றும் ஜெயாபச்சன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

மேலும் முலாயம் சிங் யாதவின் தொகுதியான அசாம்கர் தொகுதியில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். கடந்த 2014ம் ஆண்டு அசாம்கர் மற்றும் ெமயின்புரி தொகுதிகளில் முலாயம் சிங் யாதவ் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். பின்னர் ெமயின்புரி தொகுதியில் அவர் ராஜினாமா செய்தார். ஏற்கனவே கடந்த 1996, 2004, 2009ம் ஆண்டு மக்களவை தேர்தல்களில் ெமயின்புரி தொகுதியில் முலாம்சிங் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த முறை மெயின்புரி தொகுதியில் முலாயம் சிங் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவரது பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பட்டியலின்படி, ராம்பூரில் முகமத் அசாம் கானும், கன்னூஜில் டிம்பிள் யாதவும் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை வெளியான மற்றொரு பட்டியலில் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் முலாயம் பெயர் இடம்பெற்றது. கடைசி நேரத்தில் அகிலேஷை மூத்த தலைவர்கள் சமரசம் செய்ததால் தந்தை பெயரை சேர்க்க அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Akhilesh ,star ,Mulayam , Akhilesh, Mulayam singh,
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை