×

போக்குவரத்துத்துறையினரை கலாய்க்கும் நெட்டிசன்கள் பஸ்சில் படம், பாடல் வேண்டாம் என்று ‘வாட்ஸ்-அப்’பில் சுற்றறிக்கை: தப்பான ஆண்டை பதிவிட்டு தவிக்கும் அதிகாரிகள்

சென்னை: தவறான தேதியில் அச்சடிக்கப்பட்டதாக கூறி ‘வாட்ஸ்-அப்’பில் ேபாக்குவரத்துத்துறையினரின் சுற்றறிக்கையை வெளியிட்ட சம்மந்தப்பட்டத்துறை அதிகாரிகளை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு, சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 8 இடங்களில் கோட்டங்கள் மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் ஓட்டுனர், நடத்துனர், அலுவலக பணியாளர்கள் என 1.43 லட்சத்திற்கும் மேற்பட்ேடார் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ் வழங்குதல், விடுமுறை உள்ளிட்ட எந்தவிதமான தகவலையும் தெரிவிக்க வேண்டும் என்றாலும் அதற்கு துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்படும். அந்தவகையில் சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டாதகவும் அதில், தேதி மாற்றி அச்சடிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

அதாவது அரசு ேபாக்குவரத்துக்கழகம் (கோவை) கோட்டம், ஈரோடு மண்டலம் என்ற பெயரில் வெளியிட்டப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘தற்போது தேர்தல் ஆணையம் நடத்தை விதி நடைமுறையில் இருப்பதால் நமது ஈரோடு மண்டல பேருந்துகளில் ஒலிநாடா, தொலைக்காட்சி பெட்டி, எப்.எம்., அலைவரிசை போன்றவைகளை பயன்படுத்தாமல் இருக்க அனைத்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கும் தக்க அறிவுரை வழங்குமாறு அனைத்து கிளை மேலாளர்களுக்கும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக புகார்கள் பெறப்படுமானால் சம்மந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துனர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது’ என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மேலே 17.9.2019 என்ற தேதி குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தற்போது மார்ச் மாதமே நடந்து வருவதால், இந்த அறிக்கையை ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மறுபதிவிட்டு ‘நெட்டிசன்’கள் அதிகாரிகளை கலாய்த்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Watts-Up , transport department, whats-app
× RELATED இந்தியாவில் கடந்த செப்டம்பர்...