×

தினகரன் நாளிதழ், சத்யா நிறுவனம் நடத்தும் எக்ஸ்போவில் மக்கள் குவிந்தனர்: 3வது நாளாக பொருட்கள் வாங்க ஆர்வம்

ஆலந்தூர்: தினகரன் நாளிதழ் மற்றும் சத்யா நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் எக்ஸ்போ நடத்தப்படுகிறது. இதன்படி இந்தாண்டு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த 22ம் தேதி, எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் எக்ஸ்போ 2019 கண்காட்சி துவங்கியது. நாளை வரை காலை 10 மணி முதல் இரவு 8.30 மணிவரை கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இதில் சத்யா நிறுவனம் சார்பில் ஒனிடா, இடாச்சி, சாம்சங், புளூஸ்டார், வீடியோகான், எல்.ஜி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. அபி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் சார்பில், தேக்குமர கட்டில், மெத்தைகள், சோபாக்கள், தோல் பொருட்கள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இவற்றை மக்கள் ஆர்வமுடன் வாங்கினர். பைசன் நிறுவனம் சார்பில் பினாயில், பிளிச்சிங் பவுடர், சமையல் அறை, பாத்ரூம், புளோர் கிளினிங்குக்கு பயன்படும் பல்வகை ரசாயன கலவை பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டது.எஸ்5 ஹெல்த்கேர் நிறுவனம் சார்பில், உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வது, முகப்பரு, முடி உதிர்தல், எடை குறைத்தல், கருமேனியை சிவப்பமாக மாற்றுவது போன்ற ஆயுர்வேத மருந்து பொருட்கள் மற்றும் ஸ்பாவில் சலுகை விலையில் அழகுசாதன பொருட்கள் இடம்பெற்று இருந்தன. தள்ளுபடி விலையில் அழகுசாதன பொருட்கள் வழங்கப்பட்டது. இதுதவிர அகத்தியர் பிரணவ பீடத்தின் சார்பில், ஆயிரம் முதல் ரூ.1 கோடி வரையிலான ஒன்று முதல் 21 முகங்கள் கொண்ட ருத்திராட்சம், ஸ்படிக லிங்கம், எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளை தடுக்கக்கூடிய, இயற்கை மூலிகைகளால் தயாரான வீட்ரா எனும் சத்து பொருட்கள் மற்றும் உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டன.

எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் தவிர வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டன. மெத்தை விரிப்புகள், திரைச்சீலை, தலையணைகள், சோபா குஷன், டேபிள் மேட், டிராவல் பெட், உல்லன் மற்றும் சில்க் வகையிலான தரைவிரிப்புகள் போன்றவையும் பெண்களுக்கான ஆடை, அணிகலன்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் சலுகை விலையில் விற்கப்பட்டன. தள்ளுபடி விலையில் ஏர்கூலர், மாடுலர் கிச்சன், இன்வெர்ட்டர்கள், சர்க்கரை வியாதியை தடுக்கும் ஆயுர்வேத சிரப், வலி நிவாரணி பொருட்கள், நவீன உடற்பயிற்சி கருவிகள் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். காய்கறிகளை நறுக்கும் நவீன இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது. தானிய வகைகள் மற்றும் இயற்கை உணவு பொருட்களை சிறுவர்களும் பெரியவர்களும் வாங்கினர்.

3வது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், மக்கள் கூட்டம் காலை முதல் அலைமோதுகிறது. கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த அனைத்து பொருட்களையும் பார்வையிட்டு, தங்களுக்கு எலக்ட்ரானிக் உள்ளிட்–்ட பல்வேறு பொருட்களை சலுகை மற்றும் தள்ளுபடி விலையில் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். கண்காட்சி நாளை இரவுடன் நிறைவு பெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : newspaper ,Dinakaran ,expose ,Sathya , Dinakaran daily, Satya Institute, Expo, People, Materials
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...