வேலூர் : தமிழகத்தின் பிரச்சனைகளை தீர்க்க அதிமுக கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி பொதுக்களிடம் கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ளது. அதிமுக அணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி) ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. இதில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, தேமுதிகவுக்கு 4, மற்ற கட்சி களுக்கு தலா 1 என கூட்டணி கட்சி களுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.
இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியின் கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து சத்துவாச்சாரியில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், தொகுதிக்குட்பட்ட மக்கள் ஏ.சி. சண்முகத்தின் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் 600 ஏழை மாணவர்கள் அவரது கல்வியில் இலவச கல்வி பயிலலாம் என்றும் அறிவித்தார்.
காஞ்சிபுரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் தொகுதி வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து துணை முதல்வர் ஓபிஎஸ் வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்தார் என்று பேசினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
