சிரியா: சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் தாங்கள் போர் முனையில் இருப்பது போன்ற விடியோவை ஐஎஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஐஎஸ் அமைப்பினர் ஒழிக்கப்பட்டு விட்டதாக சிரியா ஜனநாயக படையினரும், அமெரிக்க அதிபரும் அறிவித்தனர். இந்நிலையில் ஐஎஸ் அமைப்பின் பெண் படை பிரிவினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவருவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. புதிதாக வெளியிடப்பட்டிருந்தாலும் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி