×

தார்வாட் கட்டிட விபத்து : தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணிகள்.. பலி எண்ணிக்கை 16-ஆனது

பெங்களூரு: கர்நாடகாவின் தார்வாட் பகுதியில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகம் மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள குமரேஷ்வர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமையன்று அக்கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து காவல்துறையினர், மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்பு அவர்கள் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இதற்கிடையே, கட்டிட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகின. நேற்று முன்தினம் நடைபெற்ற மீட்பு பணிகளின் போது 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து நேற்றும்  மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது . இந்நிலையில் இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் இன்னும் சிலர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதால், இன்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dharwad ,building accident ,deaths , Dharwad building accident, Continuing rescue operations ,number of deaths is 16
× RELATED கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில்...