×

18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி : தயாநிதி மாறன் பேச்சு

சென்னை: தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவால் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என, தயாநிதி மாறன் கூறினார். சென்னை கிழக்கு மாவட்டம், வில்லிவாக்கம் மேற்கு பகுதி திமுக சார்பில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் வில்லிவாக்கத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பங்கேற்று பேசினார். கூட்டத்திற்கு பிறகு, தயாநிதி மாறன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தல் முடிவால் இந்தியாவின் தலையெழுத்து மாற உள்ளது. புறக்கணிக்கப்பட்ட தமிழகத்திற்கு முதலிடம் தரப்படும் என்ற நம்பிக்கையோடு செயல்படுகிறோம். 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் முடிவால் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார். கண்டிப்பாக தமிழகம் முன்னேறும். மத்தியில் கேடி ஆட்சி, மாநிலத்தில் அடிமை ஆட்சி, இரண்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஆட்சி முடிகின்ற தருணத்தில் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ஐந்தாண்டு காலத்தில் மத்திய அரசு எந்த திட்டமாவது கொண்டு வந்ததா?

தமிழகத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வந்தது தலைவர் கலைஞர். செயல்படுத்தியது தளபதி ஸ்டாலின். தற்போது, போக்குவரத்து நெரிசல், குடிநீர் பிரச்னை, மின்வெட்டு பிரச்னை தலைதூக்கியுள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு கொண்டு வருவோம். 7 பேர் விடுதலை பற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பொள்ளாச்சி விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பெயர் வெளிப்படையாக அடிப்பட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரை காப்பாற்ற இதுபோன்ற நடவடிக்கை என மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வோம். இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார். இதேபோல், திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள்  கூட்டம் வில்லிவாக்கத்தில் நேற்று நடந்தது. இதில், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேசியதாவது:

செயல்வீரர்கள்  கூட்டத்தை பார்க்கும்போது வெற்றி வாய்ப்பு உறுதியாக தெரிகிறது. இன்று  ஆண்களுக்கு தான் இடஒதுக்கீடு தேவை, ஏனென்றால் அவ்வளவு தாய்மார்கள் இங்கு  வந்து இருக்கிறீர்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அவர் அவர் பணியை  செய்தால் போதும். கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். வீண் செலவு செய்ய  வேண்டாம். வெடி வெடிக்க தேவையில்லை, அதனால் மாசு தான் ஏற்படுகிறது. இதனால்  எந்த பயனும் இல்லை. எனக்கு உங்கள் அன்பு போதும். ஒவ்வொருவரும் தங்களது  பகுதியில் உள்ளவர்களிடம் வாக்கு கேட்டால் போதும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், வில்லிவாக்கம் எம்எல்ஏ  ரங்கநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இரா.செல்வம், தொகுதி  செயலாளர் அப்புன், பகுதிச் செயலாளர்கள் பரமசிவம், பூமிஜெயின் காங்கிரஸ்  சர்க்கிள் தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட தணை தலைவர் ஹரிரங்கன், பொதுக்குழு  உறுப்பினர் வடிவேல், மதிமுக பகுதிச் செயலாளர் டெல்லிபாபு, மார்க்சிஸ்ட்  மதியழகன்,  இந்திய கம்யூனிஸ்ட் யேசு, மமக ஜாகிர் உசேன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி  அப்துல் சபீக் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : by-elections ,Tamil Nadu ,Dayanid Maran , 18 convincing, by-elections, Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...