ஆந்திராவில் தொடரும் ‘ஜம்ப்பிங்’

ஆந்திராவில் தொடர்ந்து, அரசியல் கட்சிகளில் இருந்து அதிருப்தியாளர்கள் மாற்றுக் கட்சிக்கு தாவுவது தொடர்ந்து வருகிறது. ஆந்திராவின் சித்தூர் நகர  காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சி.கே.பாபு. அவர் நேற்று முன்தினம் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசம்  கட்சியில் இணைந்தார். அவருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு சால்வை அணிவித்து உறுப்பினராக சேர்த்துக் கொண்டார்.

முன்னாள் எம்எல்ஏ சி.கே. பாபு 1989ம் ஆண்டு சித்தூர் சட்டப்பேரவை தொகுதி சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் தொடர்ந்து  1994ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து சித்தூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதேபோல் ஒருமுறை  சுயேச்சையாகவும்,  தொடர்ந்து 2 முறை காங்கிரஸ் கட்சி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>