×

பச்சை துண்டு தலைப்பாகை கட்டி கையில் கரும்போடு வந்த பெண் வேட்பாளர்: இது தேர்தல் காலம், ஏதாவது செய்யனுமே

பச்சை துண்டு தலைப்பாகை கட்டி, கையில் கரும்ேபாடு வந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நெல்லை தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக சத்யா(42) அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று வேட்பு மனுதாக்கலுக்கு அவர்  கொக்கிரகுளம் வந்தார். நாம் தமிழர் கட்சி கரும்போடு இணைந்த விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறது. இதையொட்டி கையில் கரும்பையும், பச்சை துண்டை  தலைப்பாகையும் கட்டி கட்சியினர் வந்தனர். மனுத்தாக்கல் செய்யும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் அவர்களிடம் இருந்து கரும்புகள் வாங்கி  ஓரிடத்தில் வைக்கப்பட்டன. பின்னர் வேட்பாளர் சத்யா நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

பாளை கிருஷ்ணாபுரம்  செல்வலட்சுமி நகரைச் சேர்ந்த சத்யா, பிஎஸ்சி முடித்துள்ளார். இவரது கணவர் செல்வக்குமார் நெல்லையில் துணை தாசில்தாராக பணியாற்றி  வருகிறார். நீட் தேர்வு ரத்து, விவசாயத்திற்கு முன்னுரிமை, முல்லை பெரியாறில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீர் ஆகிய கோரிக்கைகளை  வலியுறுத்தி தேர்தலில் வாக்குகள் கேட்க இருப்பதாக வேட்பாளர் தெரிவித்தார். வேட்பு மனுத்தாக்கல் செய்த கையோடு கட்சியினர் தாமிரபரணி  ஆற்றுக்கு சென்று பூக்களை தூவி நதிக்கு நன்றி தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : candidate , female candidate,election perio
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...