×

ஆரோன் பிஞ்ச் அதிரடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஷார்ஜா: பாகிஸ்தான் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த  இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 280 ரன் குவித்தது (ஷான் மசூத் 40, உமர் அக்மல் 48, பாஹீம் அஷ்ரப் 28, ஹரிஸ் சோகைல் 101*, இமத் வாசிம் 28*). ஆஸ்திரேலிய பந்துவீச்சில் கோல்டர் நைல் 2, ஜை ரிச்சர்ட்சன், நாதன் லயன், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 49 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 281 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கவாஜா 24 ரன், கேப்டன் ஆரோன் பிஞ்ச் 116 ரன் (135 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். ஷான் மார்ஷ் 91 ரன் (102 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஹேண்ட்ஸ்கோம்ப் 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பிஞ்ச் மார்ஷ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 172 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. பிஞ்ச் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெறுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Australia ,victory ,stadium ,Aaron Finch , Australia's victory, Aaron Finch stadium
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...