×

தேர்தல் நடத்தை விதிமுறை எதிரொலி அதிக மது விற்கும் கடைகளை கண்காணிக்க வேண்டும்: டாஸ்மாக் எம்.டி சுற்றறிக்கை

சென்னை: தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் 30 சதவீதம் கூடுதல் விற்பனை நடைபெறும் டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க  வேண்டும் என அதிகாரிகளுக்கு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் சட்டவிரோத மதுவிற்பனையை தடுத்து நிறுத்துவது மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அதிகாரி,  மாவட்ட எஸ்.பியின் கடமை. அதன்படி, கடந்த மார்ச் 1ம் தேதியில் இருந்து 50 சதவீதம் கூடுதல் கொள்முதல் செய்யப்பட்டுள்ள மதுபானக்கடைகளை  கண்காணிக்க வேண்டும். நகரங்களில் உள்ள குடிசைப்பகுதிகள், அவற்றுக்கு அருகில் உள்ள கடைகளை கண்காணிக்க வேண்டும்.

தினசரி விற்பனையை விட 30 சதவீதம் கூடுதலாக மதுபானம் விற்பனை செய்யும் கடைகளை கண்காணிக்க வேண்டும். மேற்கண்ட கடைகளில் பிராண்டு ரீதியாக தினசரி இருப்புகளை கண்காணிக்க வேண்டும். வழக்கத்தை விட 30 சதவீதம் கூடுதல் விற்பனை செய்யும்  கடைகள் தொடர்பாக மதுவிலக்கு துறை துணை கமிஷனர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கை மாவட்ட ஆட்சியர்களிடம்  தினசரி தாக்கல் செய்யப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : shops , Election, alcohol, tasmaq MD
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி