×

தினகரன் நாளிதழ் - சத்யா நிறுவனம் நடத்தும் ‘எக்ஸ்போ’ கண்காட்சியில் அலைமோதும் மக்கள்

* பல்வேறு வகை பொருட்களை வாங்க ஆர்வம்
* அதிரடி தள்ளுபடியால் 2வது நாளில் உற்சாகம்

சென்னை : தினகரன் நாளிதழ் மற்றும் சத்யா நிறுவனம் நடத்தும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் எக்ஸ்போ-2019  கண்காட்சி நேற்று முன்தினம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியது. 2வது நாளான நேற்று பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு ஆண்டும் தினகரன் நாளிதழ்-சத்யா நிறுவனம் சார்பில் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் எக்ஸ்போ கண்காட்சி நடந்து வருகிறது. அதேபோல், இந்த ஆண்டு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் தினகரன்-சத்யா நிறுவனத்தினர் இணைந்து நடத்தும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் எக்ஸ்போ 2019 கண்காட்சி துவங்கியது. கண்காட்சியை சத்யா நிறுவன நிர்வாக இயக்குநர் ஜாக்சன், எஸ்5 ஹெல்த்கேர் நிர்வாக இயக்குநர் சல்மா பேகம், அபி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை சேர்ந்த ஆர்.லட்சுமணசாமி, பைசன் கிளீனிங் புராடக்ட்ஸ் நிர்வாக இயக்குநர் கே.டி.ஏசுதாஸ், அகத்தியர் பிரணவ பீடத் தலைவர் எம்.வெங்கடாசலம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் முதல் வரும் 25ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8.30 மணிவரை கண்காட்சி நடக்கிறது. கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இதில் சத்யா நிறுவனம் சார்பில் ஒனிடா, இட்டாச்சி, சாம்சங், புளூஸ்டார், வீடியோகான், எல்.ஜி. உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் அபி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் சார்பில் தேக்குமர கட்டில், மெத்தைகள், சோபாக்கள், தோல் பொருட்கள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பைசன் நிறுவனம் சார்பில் பினாயில், பிளீச்சிங் பவுடர், சமையலறை சுத்தப்படுத்தும் பொருட்கள், பாத்ரூம், புளோர் கிளீனிங்குக்கு பயன்படும் பல்வகை ரசாயன கலவை பொருட்கள் பாதி விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.  

மேலும் எஸ்5 ஹெல்த்கேர் நிறுவனம் சார்பில் உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வது, முகப்பரு, முடி உதிர்தல், எடை குறைத்தல், கருமேனியை சிவப்பாக மாற்றுவது போன்ற ஆயுர்வேத மருந்து பொருட்கள் மற்றும் சலுகை விலையில் அழகுசாதன பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு வருபவர்களுக்கு தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்கப்படுகின்றன.
இதுதவிர, அகத்தியர் பிரணவ பீடத்தின் சார்பில், ரூபாய் ஆயிரம் முதல் ₹ 1 கோடி வரையிலான ஒன்று முதல் 21 முகங்கள் கொண்ட ருத்திராட்சம், ஸ்படிக லிங்கம், எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளை தடுக்கக்கூடிய, இயற்கை மூலிகைகளால் தயாரான வீட்ரா எனும் சத்து பொருட்கள் மற்றும் உணவு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. உடல் வலி, கால் வலி, இடுப்பு வலி போன்றவற்றை தீர்க்கக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மற்றும் மசாஜ் சாதனங்கள், செல்போன் மூலம் பரவும் கதிர்வீச்சுகளை தடுக்கக்கூடிய எலக்ட்ரானிக் ஸ்டிக்கர்கள்  மற்றும் மெத்தை விரிப்புகள், திரைச்சீலை, தலையணைகள், சோபா குஷன், டேபிள் மேட், டிராவல் பெட், உல்லன் மற்றும் சில்க் வகையிலான தரைவிரிப்புகள் போன்றவையும், பெண்களுக்கான ஆடை, அணிகலன்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களும் சலுகை விலையில் விற்கப்பட்டு வருகின்றன.

இதேபோல் தள்ளுபடி விலையில் ஏர்கூலர், மாடுலர் கிச்சன், இன்வெர்ட்டர்கள், சர்க்கரை வியாதியை தடுக்கும் ஆயுர்வேத சிரப், வலி நிவாரணி பொருட்கள், நவீன உடற்பயிற்சி கருவிகள் ஆகியவைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். மேலும் காய்கறிகளை நறுக்கும் நவீன இயந்திரங்கள், தானிய வகைகள், ஊறுகாய், சிப்ஸ் போன்ற ஏராளமான உணவு பொருட்களும் கிடைக்கின்றன. இங்குள்ள இயற்கை உணவு பொருட்களை சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை விரும்பி வாங்கி சுவைத்துச் செல்கின்றனர். 2வது நாளான நேற்று காலை முதல் ஏராளமான மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து, தங்களுக்கு வேண்டிய பொருட்களை சலுகை விலையில் வாங்கி மகிழ்ச்சியுடன் சென்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகளவுக்கு கூட்டம் வரும் என ஸ்டால் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கண்காட்சி நாளை வரை மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dinakaran ,newspaper ,Sathya ,The Expo Exhibition , Dinakaran's daily newspaper, Expo Exhibition conducted by Sathya
× RELATED செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில்...