×

பொன்.ராதாகிருஷ்ணன், அன்புமணி ஏ.கே.மூர்த்தி சொத்து பட்டியல்

சென்னை:  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அன்புமணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட வி.ஐ.பி வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து விவரம் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் முக்கிய பிரமுகர்கள் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த சொத்து விவரம் வருமாறு:  பொன்.ராதாகிருஷ்ணன்: கன்னியாகுமரி தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம்  ரொக்கமாக கையில் இருப்பது 48,580. வங்கியில் இருப்பு  - 50 லட்சத்து 56 ஆயிரத்து 298 விவசாய நிலம் மதிப்பு  - 2 கோடியே 51 லட்சத்து 26 ஆயிரத்து 501.  மற்ற நிலங்களின் மதிப்பு - 4 கோடியே 39 லட்சத்து 87 ஆயிரத்து 954. வணிக கட்டிட மதிப்பு - 8 லட்சத்து 25 ஆயிரத்து 700. மொத்த  மதிப்பு - 6 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரத்து 155 ஆகும். கடந்த 2014 தேர்தலின் போது பொன். ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டு இருந்த மொத்த மதிப்பு  - 3 கோடியே 99 லட்சத்து 70 ஆயிரத்து 283. முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி(தர்மபுரி): அன்புமணி பெயரில் அசையும் சொத்து 33,64,543 எனவும், அசையா சொத்து இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி பெயரில் அசையும் சொத்து 9,47,22,445ம், அசையா சொத்து 23,37,57,019 என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் மொத்தம் 7,26,81,681ம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த சொத்து விபரம்: அசையும் சொத்து மனைவி பெயரில் 7,49,21, 121ம், அசையா சொத்துக்கள் 26,27,93, 500 என கூறப்பட்டிருந்தது. மேலும் அன்புமணி மீது மருத்துவக்கல்லூரி உரிமம் புதுப்பிப்பதில் முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ தொடர்ந்துள்ள 2 வழக்குகள் உட்பட மொத்தம் 11 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேமுதிக  வேட்பாளர் எல்.கே சுதிஷ் (கள்ளக்குறிச்சி): 2014 ஆம் ஆண்டில் அசையும் மற்றும் அசையா சொத்து 33.91 கோடி இருந்ததாகவும், அது இப்போது 60.17 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் அசையும் சொத்து 3.93 கோடியில் இருந்து 337% உயர்ந்து 17.18 கோடியாகவும் அசையா சொத்து மதிப்பு 29.97 கோடியில் இருந்து 42.99 கோடியாக அதிகரித்துள்ளது. சுதீஷுக்கு 17.52 கோடி கடன் உள்ளது. எம்.எஸ்.எம்.ஆனந்தன்: திருப்பூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.

ஆனந்தன் குடும்பத்தினரின் மொத்த அசையும் சொத்து மதிப்பு: ரூ.4,43,00,000 அசையா சொத்து : ரூ.4,95,00,000/ இவர், 2011ல் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த சொத்து விவரம்: அசையும் சொத்து மதிப்பு முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ரூ.30,46,510. அசையா சொத்து ரூ.84,60,000.அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி (கிருஷ்ணகிரி): கே.பி.முனுசாமி பெயரில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மற்றும் சூளகிரி அருகே அயர்னப்பள்ளி ஆகிய இடங்களில் 8 கோடியே 18 லட்சம் மதிப்பில் வீடு மற்றும் விவசாய நிலம், அவரது மனைவி மங்கையர்கரசி பெயரில் 2 கோடியே 11 லட்சத்து 5 ஆயிரம் என மொத்தம் 10 கோடியே 29 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் அசையா சொத்துக்கள். கே.பி.முனுசாமி பெயரில் 40 லட்சத்து 16,884 மதிப்பிலும், அவரது மனைவி மங்கையர்கரசி பெயரில் 73 லட்சத்து 84 ஆயிரத்து 845 மதிப்பிலும், கூட்டு குடும்பத்தில் 13 லட்சத்து 13,400 மதிப்பில் கையிருப்பும், வங்கி இருப்பு, பத்திரங்கள், வாகனங்கள், நகைகள் என மொத்தம் 1 கோடியே 27 லட்சத்து 16,769 மதிப்பில் அசையா சொத்துக்கள் உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி (அரக்கோணம்):  அசையும் சொத்துகள்: ஏ.கே.மூர்த்தி- 39,38,450. மனைவி - 51,18,335. மகன்-35,86,790. மகள்-27,67,022 அசையா சொத்து: ஏ.கே.மூர்த்தி- 93,01,450. மனைவி-1,57,21,450. மகன்-27,94,960. மகள்-27,94,960.


ஓபிஎஸ் மகனிடம் கோடிகளில் சொத்து அம்மா, தம்பியிடம் 1.16 கோடி கடனாம்

தேனி தொகுதியில்  போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் சொத்து பட்டியல் வெளியாகி  உள்ளது. அதில் தனது தாய், தம்பியிடம் 1.16 கோடி கடன் வாங்கியிருப்பதாக அவர்  குறிப்பிட்டுள்ளார். தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளரான, துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் வேட்புமனுவில்  குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் விபரம்: கையிருப்பு ரொக்கம் 82,714. மனைவியிடம் கையிருப்பு 62,450. வங்கியில் 39 லட்சத்து 72 ஆயிரத்து 473. வங்கியில் மனைவி பெயரில் 41 ஆயிரத்து 306, மகன் ஜெய்தீப் பெயரில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 131, மகள் ஜெய பெயரில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 67. முதலீடு  மற்றும் பங்காக தனியார் நிதி நிறுவனங்களில் 47 லட்சத்து 81 ஆயிரத்து  665, சொகுசு கார்கள் 42 லட்சத்து 88 ஆயிரத்து 442, வேட்பாளரிடம் தங்க  நகையாக 120 கிராம், வெள்ளியாக 1.10 கிலோ, மனைவி பெயரில் 760 கிராம் தங்கம்,  4.75 கிலோ வெள்ளி, 10 காரட் வைரம், மகன் பெயரில் 120 கிராம் தங்கம், மகள்  பெயரில் 300 கிராம் தங்கம், மற்றொரு மகள் பெயரில் 120 கிராம் தங்கம்,  அசையும் சொத்தாக வேட்பாளர் பெயரில் 4 கோடியே 16 லட்சத்து 27 ஆயிரத்து  224 உள்ளது.

மனைவி பெயரில் பிக்சட் டெபாசிட் 31 லட்சத்து 58 ஆயிரத்து  506, மகன் ஜெய்தீப் பெயரில் 5 லட்சத்து 23 ஆயிரத்து 131, மகள் ஜெய  பெயரில் 10 லட்சத்து 61 ஆயிரத்து 67, மற்றொரு மகன் ஆதித்யா பெயரில் 3  லட்சத்து 60 ஆயிரம் உள்ளது. மொத்தம் அசையா சொத்து மதிப்பு 1 கோடியே 90  லட்சத்து 73 ஆயிரத்து 303. 2011ல் தேனி தென்கரை மற்றும் தாமரைக்குளம்  பகுதியில் 31 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 கோடியே 27  லட்சத்து 34 ஆயிரத்து 79 அளவிற்கு கடன் உள்ளது.  3 முறை முதல்வர்  பொறுப்பு, தற்போது துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுக்கு  3.27 கோடி கடன் உள்ளதாக வேட்பு மனு தாக்கலில் தெரிவித்துள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் தம்பி,  அம்மாவிடமே கடன் பெற்றுள்ள தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தனது தம்பி  ஜெயபிரதீப்பிடம் 33 லட்சத்து 3,136, அம்மா விஜயலட்சுமியிடம் 83  லட்சத்து 10 ஆயிரம் கடனாக பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படி  3கோடியே 27 லட்சம் கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ் மகன்  ரவீந்திரநாத்குமார், கடந்த ஆண்டு தனது விவசாய வருமானமாக 84 லட்சம், இதர  வருமானம் 41 லட்சம் என வருமானவரித்துறைக்கு கணக்கு காட்டியுள்ளது  குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ponnarathakrishnan ,Dhammani AKMurthi , Pon. radhakrishnan, Anbumani, AK.Murthi Property List
× RELATED மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்...