×

தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களில் பொதுக்கூட்டம் நடத்த தடை

* அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடு
* ஆணையர்கள், எஸ்பிக்களுக்கு டிஜிபி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களில் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், தெருமுனைகள் அருகே அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு, தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில், மக்களவை ேதர்தல் மற்றும் 18 சட்டப்ேபரவை ெதாகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் நாளைமறுதினத்துடன் முடிகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

இந்நிலையில், காவல்துறை ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிக்கள். மண்டல ஐ.ஜி மற்றும் டிஐஜிக்களுக்கு டிஜிபி நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
* தமிழக உள்துறை செயலாளர், காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 20ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் கடந்த 2012ம் ஆண்டு டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடத்தப்பட்ட கூட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அரசியல் சாசனத்தின் 21வது பிரிவில், பொதுமக்களின் தனிநபர் சுதந்திரம் மற்றும் தனி நபர் உரிமை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
* குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், ரோடுகள், ரோடு சந்திப்புகள் ஆகியவற்றில் பொதுக் கூட்டமோ பேரணியோ நடத்தினால் பொது மக்கள் மற்றும் குழந்தைகளின் நடமாட்டம் முடக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
* பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் நகர்புறங்களுக்கு வெளியே அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், பேரணி நடத்த காவல்துறை உயர் அதிகாரிகள் அனுமதி வழங்கலாம்.
* மக்களின் அமைதியான வாழ்க்கை பாதிக்கப்படும் வகையில், எந்த அரசியல் கட்சிகளும், தெரு முனைகள், ரோடுகள், தெருக்களில் பொதுக் கூட்டம் மற்றும் பேரணிகள் நடத்த அனுமதிக்க வேண்டாம்.
* சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி மேற்கண்ட விதிமுறைகளை காவல்துறை ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள்பின்பற்ற வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு டிஜிபி பிறப்பித்துள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், போலீஸ் டிஜிபி விதித்துள்ள இந்த திடீர் கட்டுப்பாடு அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : meeting ,towns ,Tamil Nadu , Prohibition , hold public meeting , towns across Tamil Nadu
× RELATED திருவள்ளூரில் இறுதி கட்ட பிரசார...