×

ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்த உத்தரவு

வேலூர்: பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பை ஏப்ரல், மே மாதங்களில் நடத்தி முடிக்க மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மே, அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட இயக்குனரகம் சார்பில் பள்ளிசெல்லா குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்நிலையில் மக்களவை பொதுத்தேர்தலை காரணம் காட்டி பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பை தவிர்க்க முடியாது என்றும், வழக்கம்போல அப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து மாநில திட்ட இயக்குனரகம் சார்பில் சிஇஓக்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், ‘ஆண்டுதோறும் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளி இடைநின்ற குழந்தைகளை கண்டறிய மே, அக்டோபர், ஜனவரி மாதங்களில் சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

  இதில் அடையாளம் காணப்படும் பள்ளிசெல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் உண்டு உறைவிட சிறப்பு மையங்கள் மற்றும் இணைப்பு பயிற்சி மையங்கள் மூலம் தொடர் கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது.இந்நிலையில், தொடர்ந்து நடப்பு ஆண்டும் முதல்கட்டமாக ஏப்ரல், மே மாதங்களில் ஒவ்வொரு பகுதியிலும் 6 முதல் 18 வயதுக்குள் பள்ளிசெல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உதவியுடன் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கணக்கெடுப்பு பணியை அந்தந்த மாவட்ட சிஇஓக்கள் நடத்தி முடித்துவிட வேண்டும். தேர்தலை காரணம் காட்டி தாமதம் செய்யக்கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது..

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : school children , April, May, School of Children, Survey
× RELATED கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம்