ஐபிஎல் 2019 : முதல் 6 போட்டிகளில் விளையாடப்போவதில்லை என மலிங்கா அறிவிப்பு

கொழும்பு: ஐபிஎல் 12-வது சீசன் இன்று சென்னையில் துவங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா , நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆறு ஆட்டங்களில் விளையாடப்போவதில்லை என அறிவிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் 12-வது ஐபிஎல் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. இதில் முதல் நாளில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் போட்டியில் சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

இந்நிலையில் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட இருப்பதால், ஐபிஎல் தொடரின் முதல் ஆறு ஆட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்று மலிங்கா கூறியுள்ளார். அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட இலங்கை நாட்டின் கிரிக்கெட் வாரியம், உலகக் கோப்பை தொடருக்கு வீரர்கள் பரீசிலிக்கப்பட வேண்டும் என்றால் அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் கட்டாயம் விளையாட வேண்டும் என உத்தரவிட்டது. இதன் காரணமாக 2019 ஐபிஎல் போட்டியின் முதல் 6 போட்டிகளில் விளையாடப் போவதில்லை என மலிங்கா கூறியுள்ளார். இதனால் உள்ளூரில் நடக்கும் ஒருநாள் போட்டித் தொடரில் அவர் விளையாட உள்ளார். மேலும் மலிங்கா காலே அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஐபிஎல் போட்டியில் முதல் ஆறு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட முடியாது என மலிங்கா கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More
>