×

சீனாவில் துயரம் : சுற்றுலா பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 26 பேர் பலி

பீஜிங்: சீனாவில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 26 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மத்திய சீனாவில் ஒரு நெடுஞ்சாலை வழியாக பயணிக்கும் போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான தகவல்களை உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் 5 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஹுனான் மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த கோர விபத்து நேற்றிரவு உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 7.15-க்கு நிகழ்ந்துள்ளது. தீ விபத்து நிகழந்த பேருந்தில் 53 பயணிகள், ஒரு சுற்றுலா வழிகாட்டி, 2 டிரைவர்கள்  உட்பட 56 பேர் இருந்துள்ளனர். ஒரு சுற்றுலா வழிகாட்டி மற்றும் இரண்டு ஓட்டுனர்கள், இருவர் விபத்து காரணமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  59-சீட் கொண்ட பேருந்தானது உட்புறம் முழுவதுமாக எரிந்து எலும்பு கூடானது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் கடந்த 2 நாட்களுக்கு முன் நிகழ்ந்த   ரசாயன ஆலை ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு அதில் உயிரிழப்பு 47 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : China ,passengers , Tourists, China, bus, fire accident
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்