×

சொத்துவரி உயர்வை எதிர்த்து வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் : ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சொத்துவரி உயர்த்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வரி உயர்வு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாநகராட்சி, நகராட்சி, நகர பஞ்சாயத்துகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்துவரியை 50 சதவீதமும், குடியிருப்பு அல்லாத பகுதிகளுக்கு 100 சதவீதமும் உயர்த்தி கடந்த 2018 ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.  இந்த அரசாணையின் அடிப்படையில் திருவண்ணாமலை நகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எ.வ.வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ஒவ்வொரு குடியிருப்புக்கும் தனித்தனியாக மதிப்பீடு செய்யாமல் சொத்து வரியை உயர்த்தியது சட்டத்தை மீறிய செயல் என்று வாதிட்டார்.  இதையடுத்து, சொத்து வரி உயர்த்தியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,property hike , Court should file a case, property hike,the court order
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...