×

வரிந்து கட்டும் சமாஜ்வாடி -பகுஜன் உ.பி. மட்டுமல்ல, மகாராஷ்டிராவிலும் காங்கிரசுக்கு அதே தலைவலி

உ.பி. போல, மகாராஷ்டிராவில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணியால் காங்கிரசுக்கு புது தலைவலி ஏற்பட்டுள்ளது.   இந்த இரு கட்சிகளும் பிரகாஷ் அம்பேத்கரின் பாரிப் பகுஜன் மகாசங் மற்றும் அசாசுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி இணைந்து பகுஜன் வஞ்சித் அகாடி எனத் தனிக்கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.  இதனால் முஸ்லிம் மற்றும் தலித் வாக்குகள் பிரியக்கூடும் என கருதப்படுகிறது. மகாராஷ்டிராவின் மொத்த மக்கள் தொகையில்(11.24 கோடி) 1.3 கோடி பேர் முஸ்லிம்கள் ஆவர். அதாவது 13 சதவீத முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். மும்பையில் உள்ள 6 மக்களவைத் தொகுதியில் 18 சதவீத முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இதே போன்று துலேயில் 24, நாண்டெட்டில் 17, பர்பனியில் 16, லாத்தூரில் 15, தானேயில் 15, அகோலாவில் 19, அவுரங்காபாத்தில் 20 சதவீத முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் குறிப்பிட்ட சதவீத வாக்காளர்கள் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணிக்கும், பகுஜன் வஞ்சித் அகாடி கூட்டணிக்கும் வாக்களிக்கும் பட்சத்தில் அது காங்கிரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடும் என கருதப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Samajwadi Party ,Maharashtra ,Congress , Maharashtra, SP-BSP
× RELATED லாலு மருமகனுக்கு சீட் ஒதுக்கிய...