×

பணியாளர்கள் நியமனத்தில் பல கோடி முறைகேடு வக்பு வாரிய தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிரடி சோதனை: சிக்கிய ஆவணங்களை வைத்து வாரிய தலைவர் அன்வர் ராஜாவிடம் தீவிர விசாரணை

சென்னை: வக்பு வாரிய கல்லூரியில் பணியாளர்கள் நியமனத்தில் பலகோடி முறைகேடு நடந்ததாக வக்பு வாரிய தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கிடைத்த ஆவணங்களை வைத்து வாரிய தலைவர் அன்வர் ராஜாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.மதுரையில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனத்தில் முறையான விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் பணத்தை பெற்றுக்கொண்டு பலருக்கு முறைகேடாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் பணியாளர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரை உயர் நீதிமன்ற கிளை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது.

அதன்படி, சிபிஐ அதிகாரிகள் ேநற்று முன்தினம் வக்பு வாரியத்திற்கு தலைவராக உள்ள அன்வர் ராஜாவுக்கு சொந்தமான ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் உள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கிடைத்த ஆவணங்களை வைத்து அன்வர் ராஜாவிடமும் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.இந்த விசாரணையில் மோசடிக்கான பல தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.அதன் அடிப்படையில், சென்னை மண்ணடியில் உள்ள வக்பு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வக்பு வாரியத்தில் பணியாளர் நியமனம் மற்றும் பல்வேறு முறைகேடுகள் நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

சோதனையின் போது வக்பு வாரிய தலைவர் அன்வர் ராஜா அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து நேரடியாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிவில் மோசடி நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.  இதனால், வக்பு வாரிய கல்லூரி பணியாளர்கள் நியமன விவகாரத்தில், அதிமுக எம்பி அன்வர் ராஜா மீது சிபிஐ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் அதிமுக எம்பி ஒருவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய சம்பவம் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI ,Anwar Raja ,board ,headquarters ,Waqf , Staff Appointments, CBI, Test, Board Chairman Anwar Raja
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...