×

முறையான ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட பல லட்சம் மதிப்பு பர்னஸ் ஆயில் கன்டெய்னர் லாரியுடன் பறிமுதல்: 2 பேர் கைது

திருவொற்றியூர்: மாதவரத்தில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள பர்னஸ் ஆயில் மற்றும் கன்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
மணலியில் உள்ள தனியார் மற்றும் மத்திய அரசு நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய், பர்னஸ் ஆயில் போன்றவை தனியார் டேங்கர் லாரிகள் மூலம் திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு அனுப்பக்கூடிய லாரிகளில் இருந்து ஆயிலை, லாரி டிரைவர் உதவியுடன் ஒரு சிலர்  திருடி விற்பனை செய்து வருவதும், ஆவண முறைகேடு நடப்பதாகவும் மாதவரம் போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இந்நிலையில், நேற்று அதிகாலை மாதவரம் மேம்பாலம் அருகே 200 அடி சாலையில் போலீசார் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியை சோதனையிட்டனர். அதில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பர்னஸ் ஆயில் கேன்களில் அடைக்கப்பட்டு அது கன்டெய்னரில் வைக்கப்பட்டது தெரியவந்தது.

இது சம்பந்தமாக லாரி டிரைவரை போலீசார் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதோடு முறையான ஆவணங்கள் இல்லை, எளிதில் தீப்பற்றக்கூடிய இந்த ஆயிலை கொண்டு வருவதற்கான அனுமதி இல்லை  என்பதும் தெரியவந்தது. இது சம்பந்தமாக இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து தி. நகர் பகுதியைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவர் ரமேஷ் (38) மற்றும்  வைகைச்செல்வன் (30) ஆகிய இருவரையும் கைது செய்து லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகன சோதனையில் 19 லட்சம் பறிமுதல்
தமிழக - ஆந்திர எல்லையில் ஆந்திர மாநிலம் சித்தூர் நாடாளுமன்றம் மற்றும் சத்தியவேடு சட்ட மன்ற தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படையினரும், சத்தியவேடு, நாகலாபுரம் போலீசாரும் வாகன தணிக்கையில் கடந்த 11ம் தேதி முதல் ஈடுபட்டு வருகின்றனர்.  இவர்கள் நேற்று ஊத்துக்கோட்டை அருகே சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் சுருட்டபள்ளி பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து ஊத்துக்கோட்டை வழியாக பெங்களூர், திருப்பதி நோக்கிச் சென்ற தமிழக கார்களில் சோதனை நடத்தினர். இதில் 4 கார்களில் இருந்து  உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 19 லட்சத்து 3  ஆயிரத்து 900   பறிமுதல் செய்து சித்தூர் கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Barnes Oil ,Larry , Barnes Oil, Container Larry, seized, 2 arrested
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி