×

தேர்தலில் போட்டியிட ஆசை ஹர்த்திக் பட்டேல் கனவுக்கு 26ம் தேதி விடை தெரியும்

படிதார் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு கேட்டு படிதார் அனாமட் அன்டோலன் சமிதி தலைவர் ஹர்த்திக் பட்டேல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் கலவரம் வெடித்தது. இது தொடர்பாக ஹர்த்திக் பட்டேல் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தார். இந்த வழக்கு விசாரணை மேக்சனா மாவட்டம், விஸ்நகர் செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த செஷன்ஸ் கோர்ட், ஹர்த்திக் பட்டேலுக்கு 2 ஆண்டுகள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி 2 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
இதனால் செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் ஹர்த்திக் பட்டேல் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கிய குஜராத் ஐகோர்ட், 2018 ஆகஸ்டில் 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்தது. ஆனால் தண்டனைக்கு தடை விதிக்கவில்லை.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் ஹர்த்திக் பட்டேல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புகிறார். இதற்காக தண்டனைக்கு தடை விதிக்கக்கோரி குஜராத் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற ஐகோர்ட், கூடுதல் ஆவணங்களை மார்ச் 26க்குள் தாக்கல் செய்ய குஜராத் அரசுக்கு நீதிபதி ஏ.ஜி. உரேசி உத்தரவிட்டுள்ளார். அன்று இந்த விவகாரத்தில் கோர்ட் என்ன முடிவு எடுக்கிறதோ, அதைப் பொறுத்துதான் ஹர்த்திக் பட்டேல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியுமா? என்பது தெரியவரும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hartik Patel ,election , Hartik Patel's wish, election,visible on 26th
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...