×

அசோக் சவானுக்கு காங்கிரஸ் கட்டளை மனைவிக்கு நோ... நீங்களே நில்லுங்க

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தற்போது நாண்டெட் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது நாண்டெட் தொகுதியில் அசோக் சவான் மற்றும் ஹிங்கோலி தொகுதியில் ராஜீவ் சாத்தவ் ஆகியோர் வெற்றி பெற்றனர். மகாராஷ்டிராவில் கணிசமான தொகுதிகளை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்ற முடிவில் இருக்கும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை, கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அசோக் சவானும், ராஜீவ் சாத்தமும் தத்தமது தொகுதிகளில் மீண்டும் போட்டியிட வேண்டும் என கூறி விட்டது.  அசோக் சவான் தனது மனைவி அமிதா சவான் பெயரை பரிந்துரைத்ததை விரும்பாத காங்கிரஸ் தலைமை, மீண்டும் நாண்டெட் தொகுதியில் போட்டியிடுமாறு அசோக் சவானுக்கு உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலை தொடர்ந்து செப்டம்பர் மாத இறுதியில் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரசை பொறுத்தமட்டில் இப்போதைய நிலையில் அசோக் சவானுக்கு மாற்றாக வேறு தலைவர் யாரும் இல்லை. சுஷில் குமார் ஷிண்டேக்கு கட்சியில் செல்வாக்கு இருந்தாலும், அவர் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக கருதும் அசோக் சவான் எந்த நெருக்கடியோ அல்லது போட்டியோ இன்றி முதல்வராகி விட முடியும் என கருதுகிறார். அதன் காரணமாகவே மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் சட்டப்பேரவைத் தேர்தலை மட்டுமே தனது இலக்காக கொண்டிருந்தார் அசோக் சவான். ஆனால், கட்சி தலைமை உத்தரவிட்டிருப்பதால் மீண்டும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாயத்துக்கு அசோக் சவான் ஆளாகியிருக்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ashok Chavan , Ashok Chavan's wife, wife , you just wait
× RELATED பா.ஜவில் இணைந்த அசோக் சவானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு