×

வசுந்தராவுக்கு சீட் இல்லை... ராஜஸ்தான் 25 தொகுதிகள்

ராஜஸ்தானில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும்கட்சியான பாஜ தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு பாஜ முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே சிந்தியா மீதான வெறுப்பே காரணம் என்பது நிதர்சனம். மொத்தமுள்ள 199 தொகுதிகளில் 73ல் மட்டுமே பாஜவால் வெற்றி பெற முடிந்தது. தற்போது எம்.எல்.ஏவாக இருக்கும் வசுந்தரா ராஜே சிந்தியா, தேசிய அரசியலுக்கு மீண்டும் தாவ திட்டமிட்டார். இதற்காக தனக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் தர வேண்டும் என்று பாஜ மேலிடத்தில் மனு போட்டிருந்தார். பாஜ நேற்றுமுன்தினம் வெளியிட்ட முதல் பட்டியலில் ராஜஸ்தானில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருவதால், எதற்கு வம்பு என்று பெரும்பாலும் சிட்டிங் எம்.பி.க்களையே பாஜ மீண்டும் களமிறக்கி உள்ளது.வேட்பாளர் பட்டியலில் வசுந்தரா ராஜேவின் பெயர் இடம் பெற்றவில்லை. அவரது மகளும் தற்போதைய எம்.பி.யுமான துஷ்யந்த் சிங் ஜல்வார் பாரன் தொகுதியில் மீண்டும் பாஜ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மகனுக்கு பதில் தனக்கு சீட் கிடைக்கும் என்ற வசுந்தராவின் நம்பிக்கை வீணானது. இந்த தேர்தலில் வசுந்தராவை முன்நிறுத்தினால், அம்போதான் என்ற அச்சத்தில் அவருக்கு சீட் மறுக்கப்பட்டிருப்பதாக பாஜ வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜஸ்தானில் பாஜவின் ஒரே பெண் எம்.பியான சந்தோஷ் அக்லாவத்துக்கு இந்த முறை சீட் மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக தற்போது எம்எல்ஏவாக இருக்கும் நரேந்திர குமார் கின்சால் வேட்பாளராக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 9 தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள் என்று பாஜ வட்டாரங்கள் தெரிவித்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vasundhara ,Rajasthan , Vasanthara,Rajasthan 25 blocks
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...