×

பாலகிருஷ்ணா ரெட்டி பதவிபறிப்பால் காலியான ஓசூரில் ஒளிரப்போவது யாரு?

தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஓசூர், ஒரு வித்தியாசமான சட்டமன்றத் தொகுதி. தமிழ், கன்னடம், தெலுங்கு என்று 3 மொழி ேபசும் மக்களும் உள்ளனர். நாயுடு, ெரட்டி, கவுண்டர், வன்னியர் என்று அனைத்து சமூக மக்களும் கணிசமாக வாழும் ெதாகுதி. 1951ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில், இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் சுயேட்சைகள் 2 முறையும், சுதந்திரா கட்சி 2 முறையும், காங்கிரஸ் 9முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக பாலகிருஷ்ணரெட்டி போட்டியிட்டு ெவற்றி ெபற்றார். அதிமுக சார்பில் முதல்முறையாக இந்த ெதாகுதியை கைப்பற்றிய இவருக்கு தமிழக விளையாட்டு மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது. தங்களது தொகுதி விஐபி தொகுதியாக மாறிவிட்டது. இனி வளர்ச்சிப்பாதையில் எங்கள் தொகுதி பயணிக்கும் என்று நம்பினர் மக்கள். ஆனால் கடந்த 2ஆண்டுகளில் உருப்படியாக எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இப்படிப்பட்ட நேரத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த கலவர வழக்கின் தீர்ப்பு எதிரொலியாக சமீபத்தில் அமைச்சர் பதவியை இழந்தார் பாலகிருஷ்ணரெட்டி.

அவரது எம்எல்ஏ பதவியும் பறிபோனது. இதனால் எம்எல்ஏ இல்லாத தொகுதியாக மாறியுள்ளது ஓசூர். தற்போது வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஓசூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  திமுக கூட்டணியில் சத்யா, அதிமுக கூட்டணியில் பாலகிருஷ்ணரெட்டியின் மனைவி ஜோதி ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளனர். தனது கணவரின் பின்புலத்தை மட்டுமே நம்பி, ஜோதி களமிறங்கியுள்ள நிலையில், திமுக வேட்பாளராக காங்கிரஸ் கூட்டணியோடு உற்சாகமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சத்யா. ‘‘நகரமன்றத் தலைவராக இருந்தபோது, மக்களின் பல்ேவறு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளேன். ெதாகுதி மக்களின் ேதவைகள் அனைத்தும் எனக்கு அத்துப்படி. எனவே ெவற்றி ெபற்றால் சட்டமன்றத்தில் குரல் ெகாடுத்து, அவற்றை தீர்த்து ைவப்பேன். 9முறை இந்த தொகுதியில் வென்ற காங்கிரஸ் உட்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் எனது வெற்றிக்கு மேலும் வலு சேர்க்கும்,’’என்கிறார் சத்யா.

அறிவிப்புதான் வந்துச்சு... ஒன்னும் நிறைவேறல

இங்குள்ள தொழிற்பேட்டைகளில் சாலை, சாக்கடை போன்ற எந்தவித அடிப்படை வசதியும் இல்ைல. கிராமப்பகுதிகளில் சாலை வசதி,சாக்கடை வசதிகள் அறவே இல்ைல. ஓசூர்  நகரின் முக்கிய அடையாளமாக திகழும் மத்திகிரி கால்நடைப் பண்ணைக்கு சுற்றுச்சுவர் இல்லை. 2017ம் ஆண்டு, ராமநாயக்கன் ஏரிக்கு கெலவரப்பள்ளி அணை நீர் கொண்டு வந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை ஏரி நிறையவில்லை. இதற்காக திட்ட அறிக்கை  தயார் செய்யப்பட்ட நிலையில் கிடப்பிலேயே  உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  2வருடங்களுக்கு முன்பு இங்கு நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட 26 ஏரிகளுக்கு கொடியாளம்  அணைகட்டிலிருந்து பம்பு மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என்றார். அதுவும் கிடப்பில் தான் உள்ளது. இப்படி அறிவிக்கப்பட்ட எந்த ஒரு திட்டமும் நிறைவேறாத ெதாகுதியாகவே ஓசூர் விளங்கிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் தொகுதி மக்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Balakrishna Reddy , Who will light up,Balakrishna Reddy?
× RELATED முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி...