×

சீனாவில் கார் மோதி தாக்குதல் 6 பேர் பரிதாப பலி : ஓட்டுனர் சுட்டுக்கொலை

பெய்ஜிங்:  சீனாவில் நேற்று காலை நடந்து சென்ற பொதுமக்கள் மீது காரால் மோதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்  6 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கார் ஓட்டுனரை போலீசார் சுட்டுக்கொன்றனர். சீனாவின் மத்திய ஹூபேய் மாகாணத்தில் உள்ள சாயாங் நகரத்தில் நேற்று காலை வழக்கம் போல் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த கார் நடந்து சென்று கொண்டு இருந்த பொதுமக்கள் மீது தாறுமாறாக மோதியது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர்.

பொதுமக்கள் அலறி கூச்சலிட்டனர். எனினும் காரை அதன் ஓட்டுனர் நிறுத்தாமல் தொடர்ந்து பொதுமக்கள் மீது மோதியபடி  தாறுமாறாக ஓட்டிச் சென்றார். இதனிடையே அந்த பகுதியில் இருந்த போலீசார் காரை நிறுத்த முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அந்த நபர் அதனை பொருட்படுத்தாத நிலையில் போலீசார் துப்பாக்கியால் ஓட்டுனரை சுட்டனர். இதில் கார் ஓட்டுனர் உயிரிழந்தார். கார் மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சீனாவில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : car crash ,China , 6 killed in car crash,China
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்