×

‘குதிரை’ மாத்திரை சாப்பிட்டு கள்ளக்காதலியுடன் உல்லாசம்; திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கொத்தனார் சாவு

சென்னை: ‘குதிரை’ மாத்திரை சாப்பிட்டு கள்ளக்காதலியுடன் லாட்ஜில்  உல்லாசமாக இருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கொத்தனார் உயிரிழந்த சம்பவம் பெரியமேட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாஸ்திரி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் வெங்கடரமணா(48). கொத்தனாரான இவர், ேநற்று காலை மெரியமேடு கற்பூரா தெருவில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் இளம் பெண் ஒருவருடன் அறை எடுத்து தங்கினார். பின்னர் மாலை 6.30 மணி அளவில் வெங்கடரமணாவுடன் தங்கி இருந்த இளம் பெண் அரை குறை ஆடைகளுடன் லாட்ஜின் வரவேற்பு அறைக்கு ஓடிவந்து.

என்னுடன் தங்கி இருந்த வெங்கடரமணா திடீரென வாந்தி எடுத்து படுக்கையிலேயே மயங்கி விழுந்துவிட்டார் என பதறி அடித்து கொண்டு லாட்ஜ் ஊழியர்களிடம் கூறினார். உடனே லாட்ஜ் ஊழியர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து வெங்கடரமணாவை பரிசோதனை செய்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்று விட்டனர்.
பின்னர் லாட்ஜ் ஊழியர்கள் சம்பவம் குறித்து பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி போலீசார் விரைந்து வந்து வெங்கடரமணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து வெங்கடரமணாவுடன் வந்த இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. இளம் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: உயிரிழந்த வெங்கடரமணா கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில் வீட்டு வேலை செய்யும் இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இளம் பெண்ணும் தனது கணவருக்கு தெரியாமல் வெங்கடரமணாவுடன் அடிக்கடி லாட்ஜில் அறை எடுத்து ஒன்றாக தங்கி உல்லாசமாக இருப்பது வழக்கம். அதன்படி இளம் பெண் வீட்டு வேலைக்கு செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு அதிகாலை 5.10 மணிக்கு வெங்கடரமணாவுடன் பெரியமேட்டில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். மதியம் உணவு சாப்பிட்ட பிறகு வெங்கடரமணா வெகு நேர உல்லாசத்திற்கு, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான சக்தி உள்ள ‘குதிரை’ மத்திரையை உட்கொண்டு இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போழுது திடீரென வெங்கடரமணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இளம் பெண் மீதே விழுந்து இறந்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death , Horse Pills, Kondanar, Chennai, Sculpture, Death, Heart Attack
× RELATED குதிரை வழிபாடு