×

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் தீவிரம் : டி.ஆர்.பாலு, அன்புமணி, பொன்.ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தனர்

சென்னை : தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தீவிரம் அடைந்துள்ளது. தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் தற்போது தென் சென்னை எம்பியாக உள்ளார். கன்னியாகுமரியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிட முன்னாள் சபாநாயகர் வைத்தியலிங்கம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்தார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட திமுக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட நடிகர் பிரகாஷ்ராஜ் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.புதுச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட சுப்ரமணியம் வேட்புமனு தாக்கல் செய்தார்.தமிழகத்தில் கடந்த 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. மார்ச் 26ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 27ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 29ம் தேதி வரை அவகாசம் உள்ளது. ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பின்னர் மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhammani ,TR Balu ,Tamil Nadu ,Ponnarakrishnan , Lok Sabha, Nomination, Filing, AIADMK, TRB, Duramani, Ponnathirakrishnan
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...